பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 நினைவுக் குமிழிகள்-4 யும் தந்து விடுதலை பெற்றுத் திருப்பதி வந்தேனோ அந்த நோக்கம் நிறைவேறும் நன்னாள் இந்நாள் என்ற நினைவுடன் பேட்டிக்குத் தயாரானேன். நான் அன்றைய தேதி வரை எழுதி வெளியிட்ட நூல்கள் 22லும் ஒவ்வொரு படியையும் கட்டிக் கொணர்ந்திருந்தேன். என் வாழ் நாளில் இந்தப் பேட்டி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதால் பேட்டியில் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் இக்குமிழியில் எழச் செய்கின்றேன் நான் வல்லுநர் குழு இருந்த அறையில் நுழைந்தவுடன் துறையில் பணியாற்றி வந்த வேலையாள் என்னுடைய 22 நூல்களையும் கொணர்ந்து மேசையின் மீது வைத்தான் முதலில் எங்கள் துணைவேந்தர் தான் பேட்டியைத் தொடங்கினார். து. வே நீங்கள் எப்படி உத்தியோக வாழ்க்கையைத் தொடங்கி இன்றிருக்கும் நிலையை அடைந்தீர்கள்? நான் : நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டதும் புதிதாகத் தொடங்க இருந்த ஒரு நடுநிலைப் பள்ளியின் முதல் தலைமையாசிரியராக நியமனம் பெற்றேன். ஒன்பதாண்டுகள் ஓயாது உழைத்து அதனை உயர் நிலைப் பள்ளியாக வளரச் செய். தேன். 154 ம | ண |ா க் க ர் க ளு ட ன் தொடங்கப் பெற்ற நடுநிலைப் பள்ளியை 1000க்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளியாக வளர்த்தேன். சீரும் சிறப்புமாக இருந்த நிலையில் காரைக்குடியில் தொடங்கப் பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவனாகப் பணியை ஏற்குமாறு அழைப்பு வந்தது. மூன்று மாத சம்பளம் கட்டித் தலைமையாசிரியர் பணியை 2. இதை எழுதிய போது 87 நூல்கள் வெளிவந்து விட்டன. திருப்பதியில் ஒய்வு பெற்றுச் சென்னை வந்தபோது 42 நூல்கள் வெளி வந்திருந்தன.