பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 40.5 துறந்து கல்லூரியில் பதவி ஏற்றேன். பத்தாண்டுகள் துறையைச் சீரிய முறையில் வளர்த் திருந்த காலையில் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவி விளம்பரப் படுத்தப் பெற்றிருந்தது. இப்பொழுதும் மூன்று மாதம்சம்பளம் கட்டி விடுதலை பெற்றுத் திருப்பதி யில் பணியேற்றேன். தமிழக அரசின் மானியம் பெற ஒன்பதாண்டுகள் சென்னைத் தலைமைச் செயலகத்துக்குக் காவடி எடுத்தேன். மானியமும் வந்தது. தாங்கள் பெருமனங் கொண்டு துறையை முதுகலை, ஆராய்ச்சி பெற வாய்ப்பளிக்கும் ஒரு துறையாக வளர்க்கத் திட்டமிட்டீர்கள். இப்போது உங்கள் முன் பேட்டிக்கு வந்துள்ளேன். து. வே. சரி; உங்கட்குக் கல்வித்துறை பொறுப்பு அளிக்கப்பெற்றால், தாய்மொழிமூலம் கல்வி கற்பிப்பதில் உங்கள் கருத்தென்ன? பாடங் கற்பிக்கும்போது வகுப்பிலும், பாடநூல்கள் எழுதும்போது நூல்களிலும் கொச்சை மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் உங்கள் கருத்தென்ன? நான் : எல்லாமட்டங்களிலும் பலநிலைகளில் தாய் மொழிமூலம் கற்பிப்பதை நடைமுறைப் படுத்த முயல்வேன்; கற்பிப்பவர்களின் ஒத்துழைப்பைக் கொண்டு தான் செயற்படுத்துவேன். தான்தோன்றித் தனமாகச் செயற்படுத்துவதைத் தவிர்ப்பேன். வகுப்பறையில் வேண்டுமானால் வாய்மொழிமூலம் கற்பிக்கும் போது கொச்சைமொழிச் சொற்கள் கலந்து வருவதைப் பொறுத் துக் கொள்ளலாம். ஆனால் நூல்கள் எழுதும்போது இவை எழுத்து மொழியில் கலப்பதை அனுமதிக்க மாட்டேன். து.வே. இக்காலத்தில் அமைச்சர்கள் முதலியோர் கொச்சை மொழியை ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவும் ஒருவித வேகத்தை அடைந்து வருகின்றதே.