பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (J8 நினைவுக் குமிழிகள்-4 நான் : அமைச்சர்கள் அறிஞர்கள் அல்லர்; மக்கள் பிரதிநிதிகள். மக்கள் ஆதரவு பெறுவதற்காக எதையும் பேசுவார்கள்.இந்தஅரசியல் பேச்சுக்கு மதிப்பு தரலாகாது. அறிஞர்கள் கூட்டம் இதனை வன்மையாக எதிர்க்க வேண்டும். அறிஞர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு இத்தகைய போக்கிற்குக் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். து. வே . அரசுக்கு எதிராக நீங்கள் இப்படிப் பேசினால் உங்களைச் சிறையில் போட்டு விடுவார்கள் இங்குப் பேசியதை நீங்கள் வெளியில் பேசினால் உடனே இப்பலன் உங்கட்குக் கிட்டி விடும். கான் : நான் அரசியல் வாதி அல்லன். நீங்கள் என் சிந்தனையைத் தூண்டினிர்கள். நான் கவடில்லாத மறு. மொழி பகர்ந்தேன். உண்மையை நிலை நாட்டுவதில் எந்தவிதமான தியாகத்தையும் மேற்கொள்ளலாம். து. வே . நீங்கள் துணிவானவர். உண்மையைப் பேசு கின்றீர்கள். இதைக் கருதியே நான் உங்கட்கும் பேராசிரியர் பதவி தருவதற்கு யோசித்துக் கொண்டிருக் கின்றேன். இத்துடன் தம் வினாக்களை நிறுத்திக் கொண்டு வல்லுநர் குழுவிற்கு வாய்ப்பளித்தார் துணைவேந்தர். வல்லுநர் குழுவிலிருந்த மதுரைப் பேராசிரியர் துணை வேந்தர் முதலில் கேட்கத் தொடங்கினார் அவர் தொடங் கினால் இன்னொரு உறுப்பினர் இருப்பதை மறந்து விடு வார். தாமே கேட்டுக் கொண்டிருப்பார். தெ பொ. மீ. : நீங்கள் துறையூரில் தலைமை யாசிரியராக இருந்தீர்கள். அந்த நல்ல பதவியை ஏன் விட்டீர்கள்?