பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 407 நான் : (இவர் எங்கேயோ என்னை இழுத்துச் செல் கின்றார் என்பதை ஒரு கணத்தில் ஊகித்துக் கொண்டேன் இவரிடம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் என்னைச் சரிப்படுத்திக் கொண்டு) பதவியை விடுவது அல்லது அதில் நீடிப்பது என் விருப்பம். மாண்புமிகு வல்லுநர் குழு உறுப்பினர் என் சொந்த விஷயத்தில் தலை யிடுவது தம் உரிமை மீறுவதாகும் (சற்று என் வேகத்தை அடக்கிக் கொண்டு) என் குருதேவ்' அவர்கள் என் சொந்த விஷயத்திலும்அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. காரைக்குடிக் கல்லூரி நிர்வாகம் எனக்கு அழைப்பு அனுப்பியது. (நான் விண்ணப்பம் கூட அனுப்பவில்லை என்பதையும் சுட்டி) ஆகவே, காரைக்குடிக்குடியில் பணியேற்றேன். வள்ளல் டாக்டர் இராம. அழகப்பர் தாம் புதிதாகத் தொடங்கின ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுபவம் மிக்க உயர்நிலைப்பள்ளித் தலைமை யாசிரியர்களையே பேராசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்று விரும்பியதால் கம்பன் அடிப் பொடி பரிந்துரையின் பேரில் முதல்வர் தந்திமூலம் அழைப்பு அனுப்பினார். அதனால் அழைப்பை ஒப்புக் கொண்டு காரைக்குடி சென்றேன். தெ.பொ.மீ : நீங்கள் காரைக்குடி சென்றிருக்க வேண்டியதில்லை. தலைமையாசிரியன் சம்பளம் உயர்த்தப் பெற்றதனால் நீங்கள் துறையூரிலேயே தங்கியிருந்திருக் கலாம்? நான் : நான் துறையூரில் தங்குவதும் காரைக்குடி செல்வதும் என் விருப்பத்தைப் பொறுத்தது. நான் ஒன்பதாண்டுகள் நன்முறையில் பணியாற்றி நற்புகழ் பெற்றேன்: நற்பயனையும் அடைந்தேன். தலைமை யாசிரியர் பணி போதும் என்று நினைத்தேன். என் 3. நானும் என் போன்ற நெருங்கியவர்களும் தெ.பொ.மீ.யைக் குருதேவ்' என்று அழைப்ப்து வழக்கம்.