பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 நினைவுக் குமிழிகள்-4 எண்ணம் மேற்கல்வியை நாடிச்சென்றது. கல்லூரி வாழ்வில் ஒய்வு இருக்கும். ஒய்வில் மேலும் கற்கலாம்: ஆய்வையும் மேற்கொள்ளலாம் என்று என்மனம் எண்ணிய இந்த எண்ணம் நான் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அரும்பியது. சந்தர்ப்பத்தாலும் சூழ்நிலையாலும் எம். ஏ., எம். எஸ்.சி. பட்டம் இல்லாததாலும் என் ஊழ் என்னை உயர்நிலைப் பள்ளி வாழ்வில் தள்ளியது. ஆனால் மேற்கல்வி உந்தலால் வித்துவான், தேர்வில் வெற்றி பெற்றேன். விதிகள் எம். ஏ. பயில அநுமதிக்காத தால் பி. ஏ. பயில வேண்டியதாயிற்று. பி. ஏ.யில் தமிழில் மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறினேன். எம். ஏ. க்குப் பயின்று கொண்டிருந்தேன். இந்நிலையில்தான் கல்லூரிப் பணி அழைப்பாக வந்தது. எப்படிக் கல்லூரியில் நுழைவது? யார் பரிந்துரையைப் பெற்றால் கல்லூரில் பணி கிடைக்கும்?' என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு அழைப்பு தானாக வந்தது. இஃது என் நல்லூழ் என்றே எண்ணினேன். பள்ளி நிர்வாகத்தை அண்மி "விடுதலை தருமாறும், இயன்றால் தொடர்புரிமை (Lien) யுடன் ஒராண்டு விடுமுறை அளிக்குமாறும் வேண்டினேன். இரண்டையும் நிர்வாகம் மறுத்ததால் ஒப்பந்தப்படி மூன்று மாத சம்பளத்தைத் தந்து என்னைப் பணியிலிருந்து விலக்கிக் கொண்டு காரைக்குடி சென்றேன், என் வாழ்நாளில் சம்பளத்தை முதன்மையாகக் கருதிய தில்லை; பணியையே அங்ங்னம் கருதினேன். தலைமை யாசிரியர் சம்பளம் ஏறியதாகச் சொன்னிர்கள். நான் காரைக்குடி சென்றது பணிமாற்றத்தைக் கருதியேயன்றி, சம்பளத்தைக் கருதி யன்று. சம்பளத்தைக் கருதிச் சென்றிருந்தால் ரூ 30+ 25= 55 இழப்பில் சென்றிருக்க மாட்டேன். காரைக்குடி சென்றும் இந்த இழப்பை ஈடுசெய்யுமாறு கேட்டிருந்தால், என் வேண்டுகோளுக்குக் கல்லூரி நிர்வாகம் செவிசாய்த்து இழப் பத் தவிர்த் திருக்கும். ஆனால் நான் அதற்கு முயலவில்லை. (இங்ங்னம் மறுமொழி தந்து கொண்டிருக்கும்போதே என் மனம்