பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 46.9 சிந்தனையில் ஆழ்ந்தது. தலைமையாசிரியர் சம்பளம் கணிசமாக உயர்ந்தது 1950இல் அன்று. 1960இல் தான் என்ற உண்மை மின்வெட்டுபோல் என் மனத்தில் பளிச்சிட்டது). உடனே சொன்னேன்; ' சம்பளம் உயர்ந்தது 1960லேயன்றி 1950இல் அன்று பின்னால் சம்பளம் உயரும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள நான் உபநிடத முனிவனாகிய வசிட்டனும் அல்லன், வாமதேவனும் அல்லன்' என்று. இந்த என் விடையைக் கேட்டு வல்லுநர் குழுவும் துணைவேந்தர், ஜகந்நாதரெட்டி பதிவாளர் புலத் தலைவர் (Dean) உட்பட அங்கிருந்த அனைவரும் தம்பித்துப் போயினர். என்னை நோக்கினர்; தெ. பொ மீயை நோக்கினர் சில நிமிடங்கள் மாறி மாறி நோக்கினர். தெ. பொ. மீ. முகத்தில் ஈஆடவில்லை. முகம் சுருங்கியதை என்னால் காண முடிந்தது. அங்கிருந்தோர் அனைவரும் இதனைக் கவனித்திருக்கலாம். 'ஆசை வெட்கம் அறியாது’ என்பது பழமொழியன்றோ? எதையோ என்னிடமிருந்து சிறிது சிறிதாக வெளிக் கொணர (elicit) எண்ணி வந்தார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் என் விடைகள் வேறு திசையில் சென்று விட்டதால் ஏமாந்தார் என்பது என் கருத்து . துறையூர் களத்திலிருந்து விலகி, காரைக்குடிக் களத்திற்கு வருகின்றார். போரை வேறு முனையில் தொடங்க நினைக் கின்றார். மேசையின் மீதிருந்த 22 நூல்கள் அவர் கண்ணை 4. நிர்வாகத்தின்மீது வழக்கு தொடர்ந்தேன். இதை ஒருகால் என்னிடமிருந்து வருவிக்க நினைத்தார் என்பது என் ஊகம். இது வெளிப்பட்டிருந்தால் என் முறை முடிந்ததும் இவர் வம்புக்காரர். இவரைத் தலைமையிலிருந்து தவிர்ப்பது நல்லது என்பதை வலியுறுத்திப் பேச நினைத்தாரோ என்பதும் என் ஊகம்.