பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 நினைவுக் குமிழிகள்.? உறுத்தியிருக்க வேண்டும். அவற்றைக் 'குப்பை" என்று அலட்சியப்படுத்தி விடலாம் என நினைக்கின்றார். வல்லு: நர் குழு உறுப்பினர் அல்லவா? எதை வேண்டுமானாலும் கேட்கலாமே. தமிழ் நடையாடாத தேசமாதலால். டாக்டர் ரெட்டியும் இதை நம்பலாம். பின்னர் அவர் விடுத்த வினாக்கள் இப்போக்கிலேயே இருந்தன. தொடங்குகின்றார். தெ. பொ. மீ; காரைக்குடி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் வாரத்திற்கு எத்தனை மணிநேரம் பணியாற்றினிர்கள்? கான் : விதிப்படி 14 மணி நேரம் பணியாற்ற வேண்டும். அப்படி ஆற்றியிருப்பேன். தெ. பொ. மீ . டாக்டர் ரெட்டியார், நீங்கள் பதினான்கு மணிநேரம் பணி ஆற்றியிருக்க முடியாது. பயிற்சிக் கல்லூரி என்றால் வேலையே இல்லை என்பது பொருள். கான் : துணைவேந்தர் பணி விதிகளைப் பிறப்பிப்பது, அவற்றை நடைமுறைப் படுத்துவது கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும். ஏனைய கல்லூரிகளில் உள்ள பணிக்கும் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள பணிக்கும் வேறுபாடு மிக அதிகம். ஏனைய கல்லூரிகளில் பாடங்களைப் போதிப்பது, தேர்வுகள் நடத்துவது இவற்றுடன் பணி முடிகின்றது. பயிற்சிக் கல்லூரிகளில் பாடம் போதிப்பது, தேர்வுகள் நடத்துவது இவற்றுடன் பல்வேறு விதமான பணிகளும் உள்ளன. இங்குப் பட்டதாரிகளை ஆசிரியர்களாக்குவது." இதில் எத்தனையோ படிகள் உள்ளன. இந்த விவரங்களை யெல்லாம் துணைவேந்தர் அறிவதற்கு வாய்ப்பில்லை. இதற்குமேல் தெ. பொ. மீ. யால் தொடர முடிய வில்லை. இங்கும் அவர் நினைத்த எண்ணத்தைச் செயற் படுத்த முடியவில்லை. முகத்தில் அசடு வழிவதை என்னால்