பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 4置了 காண முடிந்தது. குழுவிலிருந்த அனைவரும் அவருடைய பரிதாப நிலைக்கு இரங்கியிருக்க வேண்டும். மேசையின் மீதிருந்த நூல்களில் முத்தொள்ளாயிர விளக்கம்' என்ற பல்கலைக் கழகம் வெளியிட்ட என் நூலை எடுக்கின்றார். ஏதோ கேட்க வேண்டுமல்லவா? கேட்கின்றார். தெ. பொ. மீ: இந்த நூலுக்குப் பலர் உரை எழுதி யிருக்கிறார்களே. நீங்கள் இதில் செய்த சிறப்பென்ன? நான் : நான் உரை என்று எழுதவில்லை. ஒவ்வொரு பாடலிலும் பாட்டநுபவம் பெறும் முறையை எடுத்துக் காட்டி படிப்பவர்கள் அநுபவித்தற்கும் வகை செய்துள் ளேன். தமிழ் நடையாடாத பிற மாநிலத்திலுள்ளாரும் இந்நூலைப் பற்றி ஒரளவு புரிந்து கொள்வதற்கு ஆங்கில அறிமுகம் ஒன்று நூலின் முன்வாயிலாக அமைத் துள்ளேன். தெ. பொ. மீ, முத்தொள்ளாயிரக் கால ஆராய்ச்சி யால் ஏதாவது முடிவுக்கு வந்துள்ளிர்களா? நான் : முயன்றுள்ளேன். நம் நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் காலத்தைப்பற்றிக் கவலை கொள்ளுவ தில்லை. ஆகவே தாம் வாழ்ந்த காலம் பற்றி எவ்விதக் குறிப்பையும் விட்டுச் செல்வதில்லை . இதனால் முத்தொள்ளாயிர ஆசிரியர் காலத்தைப் பற்றி எந்தவித முடிவிற்கும் வரமுடியாது அப்படியே விட்டு வைத்துள் ளேன். வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது மேலும் ஆராய்வேன். இதுகாறும் பேட்டியின் காலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு டாக்டர் மு. வ. வுக்கு வினவ வாய்ப்பே தர வில்லை. அவர் முகத்தில் பொறுமையை இழக்கும் குறிப்பு கூட தென்பட்டு விட்டது. இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.