பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 & நினைவுக் குமிழிகள்.4 மு. வ : கம்பனுடைய புலமைச் சிறப்பு பற்றி உங்கள் கருத்தென்ன? நான் : கம்பன் மக்கட்கவி. அரக ஆதரவு அவனுக்கு இல்லை. ஆழ்வார்கள் பாசுரங்களில் உள்ளத்தைப் பறி கொடுத்தவன். இதன் காரணமாகக் காசில் கொற்றத்து இராமன் காதையைக் காவியமாக்கித்தமிழகத்தில் இராம பக்தியைப் பெருக்கெடுத்தோடச் செய்தவன். விருத்த யாப்பை அற்புதமாகக் கையாண்டு அதில் பல 'சாகசங் களைக் காட்டி விளையாடியவன். ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்ற தனியனின் சொற்றொ டாலும் வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுாற்றாரே என் பாடற் பகுதியாலும் இஃது அறியப்படும்" மு. வ. : இக்காலத்தில் கம்பன் புகழ் பெருகி வருவ தற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கருது கின்றீர்கள்? நான் : காவியத்தில் தன்னியல்பாகவே பெருமை சேர்ந்து விட்டது; 'சரக்கு முறுக்கானதால் மக்கள் அதனை நாடுகின்றனர். நாடளாவியுள்ள கம்பன் கழகங்கள் நடத்தும் விழாக்களால் அவன் புகழ் மேலும் பரவுகின்றது. ஆராய்ச்சி அறிஞர்களும் ஆய்வு மாணவர் களும் கம்பன் காவியத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மகிழ்கின்றனர். ஆனால் சிலர் ஒரு சில குறிப்பு களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இக்கால அறிவியல் கூறுகளும் அதில் இருப்பனவாகக் கூறுவது பொருத்தமாக இல்லை. 5. கம்ப. பாலகா, தற்சிறப்பு-4 6. வெண்பாவிற் புகழேந்தி' என்று தொடங்கும் தனிப்பாடல், 7. கம்ப. பாலகா. தற் சிறப்பு-21.