பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 《辽、 மு. வ ! உங்கள் கூற்றுக்குச் சான்றுகள் தர முடியுமா? நான் :முடியும் வலவனேவா வானவூர்தி என்ற சொற் றொடரிலிருந்து அந்தக் காலத்தில் (புறநானூற்றுக் காலத் தில்) வானவூர்தி இருந்ததாக கூறுவது பொருத்தமில்லை. கவிஞன் கற்பனையிலெழுந்த விசயை செலுத்திய மயிற் பொறியைக் காட்டலாம். அணுவினைச் சத கூறிட்ட கோணினும் உளன்’ என்ற சொற்றொடரைக் கொண்டு கம்பன் காலத்திலேயே அணுவாற்றலைப் பற்றித் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர் என்று கூறுவது பொருந்து மாறில்லை. தெ. பொ. மீ ; கோண்’ என்பது அணுவின் ஒரு பகுதி என்பதால் அணுப் பிளவு" (Atomic Fission) பற்றித் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்று கொள்ளலாமன்றோ? கான் : அங்ங்ணம் கொள்ள முடியாது. அணு என்பது கண்ணுக்குப் புலனாகா சிறு துகள் என்று கருதியிருக் கலாம். அதில் நூறில் ஒரு பங்கிட்ட பகுதிக்கு 'கோண்” என்று பெயர் சூட்டியிருக்கலாம். கோண்’ என்பது ஒர் அளவு. அணுத்துகள்களான (Atomic particles) புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் மேசான், பாசிட்ரான் போன்றவை அன்று. மு. வ: பாரதியாரின் கவிதைகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன? நான் : தேசப்பற்று மொழிப்பற்று, சமயப்பற்று, பரந்த சமய நோக்கு போன்றவைகளைக் கொண்ட அற்புதக் கவிஞர். இக்காலத்தில் வசன கவிதையின் தந்தை புதுக்கவிதையின் பிதாமகன். புதிய முறையில் காவியம் இயற்றி பாமர மக்கட்கும் கவிதைச் சுவையூட்டிய கலை உணர்வு மிக்க பெருமகன். ஆனால் மிக்கக் கலை யுணர்வு ஊட்டக்கூடிய பாஞ்சாலி சபதத்தில் இவரே