பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 நினைவுக் குமிழிகள்-4 செய்த இடைச் செருகல் இந்த அழகிய காவியத்தின் தரத்தைக் குறைத்து விட்டது. தெ. பொ. மீ ; எந்த இடைச் செருகல்? காட்ட முடியுமா? நான் : காட்ட முடியும்; காட்டுவேன். தெ. பொ. மீ: காட்டுங்கள், பார்க்கலாம். நான் : பிரச்சினையை விருப்பு வெறுப்பற்ற முறையில் அணுகவேண்டும். உணர்ச்சி வசப்பட்டுப் பேசினால் உண்மை மறைந்து விடும். நம்முடைய ஆணவ மலம்' தான் உண்மை காண்பதில் திரையிடுவது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அறிவார் என்று கருதுகின்றேன். சபதச் சருக்கத்தில் (ஐந்தாவது சருக்கம்) தீமையில் அண்ணனை வென்ற துச்சாதனன்’ திரெளபதியின் துகிலை உரிகின்றான். பிச்சேறி யவனைப்போல்-அந்தப் பேயனும் துகிலினை யுரிகையிலே உட்சோதி யிற்கலந்தாள்:-அன்ன உலகினை மறந்தாள் ஒருமையுற்றாள் என்ற அடிகட்குப்பின், 'ஹரி,ஹரி ஹரி என்றாள்-கண்ணா! அபயம் அபயம் உனக் கபயம் என்றாள்' என்ற அடிகளில் சரணாகதி முடிந்து விடுகின்றது. அதற்கு பின்னர், கரியினுக் கருள்புரிந்தே-அன்று என்பது தொடங்கி? ‘ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள்' என்பது வரை ஆயில் சுமார் 50 அடிகட்குமேல் உள்ள இடைச் செருகல்"