பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 4 I 5 காவியத்தின் வனப்பிற்கு ஒரு சொட்டு வைத்ததுபோல் ஆகி விடுகின்றது. இந்த சகஸ்ரநாம அருச்சனை’யை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சரணாகதி ஆன பிறகு எந்த வழிபாடும் தேவை இல்லை என்ற வைணவ சித்தாந்தத்தை பாரதியார் அறியாதவர் என்று சொல்ல முடியாது. ஏன் நுழைத்தார்? என்பதை ஊகித்துச் சொல்ல முடியவில்லை. "அபயம் என்றாள்' என்று சொல்லி முடிந்தவுடன்,

  • பொய்யர்தம் துயரினைப்போல்- நல்ல" என்று தொடங்கி,

வண்ணப்பொற் சேலைகளாம்-அவை வளர்ந்தன, வளர்ந்தன வளர்ந்தனவே! என்று முடிகின்றது. பின்னர் எண்ணத்திலடங்காத நிறங் களைப் பேசுகின்றார் கவிஞர். இடையிலுள்ள செருகலைத் தவிர்த்திருந்தால் காவியத்தின் அழகு குன்றாமல் இருந் திருக்கும். தெ. பொ. மீ: ஐம்பதிற்கு மேற்பட்ட அடிகள் இருக்க ՅՔւգ աո 5 - நான்: முதலில் செருகல் தேவை இல்லை என்பதை ஒப்புக் கொண் டாக வேணடும். அடிகளின் எண்ணிக்கை யைப்பற்றிக் கவலை வேண்டா. 40 அடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தெ.பொ.t: அதுவும் இருக்க முடியாது. நான்: 'பாரதியாரின் கவிதைகள்' நூல் இருந்தால் கணக்கிட்டே காட்டி விடுவேன். எங்கள் துணைவேந்தர் நூலகருக்குத் தொ.பே. மூலம் சொன்னால் நூலே இங்கு வந்து விடும். 40 அடிகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் 36 அடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் "இடைச் செருகல் தேவையற்றது என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.