பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவுக் குமிழிகள்-4 தெ.பொ.மீ. அதுவும் இருக்க முடியாது. நான் : 20 அடிகள் என வைத்துக் கொள்ளுங்கள். இதற்குக் கீழ் நான் இறங்க ஒருப்படேன். தெ.பொ. மீ; என்ன டாக்டர் ரெட்டியார், 50க்கு மேல் என்று சொல்லி 20க்கு வந்து விட்டீர்கள்? நான் : தங்கள் திருவுள்ளத்திற்கு மதிப்பு தருவதற் காகவே. ஆனால் என்னைப் பொறுத்தவரை 50க்கு மேல் தான் என்று சொல்வேன். தெ.பொ.மீ முகத்தில் அசடு வழிந்ததை எல்லோருமே கண்டனர். டாக்டர் மு.வ.வின் முகம் சரியாக இல்லை, எங்கள் துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டியின் முகத்திலும் ஈ ஆடவில்லை. தெ.பொ. மீ. நடந்து கொண்டது முறையற்ற செயல் என்பதாக எல்லோருடைய கருத்தும் இருந்ததை அவரவர் முகச் சாயல்களினின்றும் அறிந்து கொள்ள முடிந்தது. டாக்டர் ஞானமூர்த்தி தாம் வர்ப்போவதில்லை என்பதாக என்னிடம் தெரிவித்தாரேயன்றி பேட்டியில் குழுவிடம் சொல்ல. வில்லை. தம்மூர் சென்று தம் துணைவி யாரைக் கலந்து கொண்டு எழுதுமாறு தெ. பொ. மீ. வற்புறுத்தியதால் எழுதாது சென்றுவிட்டார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆகவே குழுவின் முடிவு இவ்வாறு அமைந்திருந்தது. டாக்டர் ஞானமூர்த்தியை ரூ 1250/- மாத ஊதியத்தில் துணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் நியமிப்பது; அவர் வராவிட்டால் டாக்டர் ந. சுப்பு ரெட்டியாரை முதல் துணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் திரு.கு. தாமோதரனை இரண்டாவது துணைப் பேராசிரியராகவும் நியமிப்பது' என்பதாக. டாக்டர் ஞானமூர்த்தி வரமாட்டார் என்பதை நன்கு அறிந்தே குழு இவ்வாறு முடிவு செய்ததாக அறிந்தேன்.