பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி 41 7 தெ.பொ.மீ. திரு.கு. தாமோதரனைத் துணைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் நியமிப்பது என்று குழுவை வற்புறுத்தியதாகவும், அப்படி ஏதாவது நடைபெற்றால் டாக்டர் மு.வ. வன்மையான மாறுபடும் ©1jujL (Strong dissenting note ) Goa, 33, Goglaugm gó சொல்லவே இம்முயற்சி கைவிடப் பெற்றது என்பதையும் பின்னர் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. திரு. தாமோதரனுக்கும் இந்த விவரம் தெரிந்திருக்கும். தெ.பொ.மீ. இதனைத் தெரிவித்திருப்பார். இதன் காரணமாகத்தான் அவர் தமக்கு எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏழரையாண்டுக் காலம் எனக்கு ஓயாத தொல்லை கொடுத்தாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது, நளனைப் பிடித்த கலி ஏழரையாண்டில் நீங்கியது. ஆனால் நள ஆண்டில் பிறந்த டாக்டர் சுப்புரெட்டியார் என்ற நளனை'க் ( நள ஆண்டில் பிறந்தவன்) கவி ஏழரையாண்டுகள் சொல் லொணாத் துயரை விளைவித்தான்-தாமோதரன் வடிவில். இந்தக்காலம் வரையிலும் என்னைப் பிடித்த கலி துறையைப் பிடித்துக் கொண்டது. என் பதவிக் காலம் முடிந்ததால் கலியை விட்டு நான் நீங்கினேன். ஆனால் அந்தக்கலி-துறையைப் பிடித்து கொண்ட கலிபின்னர் ஒரிரு ஆண்டுகளில் டாக்டர் தாமோதரன் அகால மரணத்தைச் சந்திக்க நேர்ந்ததால் நல்லகாலமாக நீங்கியது. டாக்டர் ஞானமூர்த்தி வரமாட்டார் என்பதைத் துணைவேந்தர் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். இந்தத் தெளிவின் காரணமாகவே குழுவின் பரிந்துரை மேற்கூறியவாறு அமைந்தது என்பது எனக்குத் தெளிவா கியது. தெ.பொ.மீ. பச்சைக் கொடி காட்டாததால் தான் டாக்டர் ஞானமூர்த்தி மூன்று மாத காலம் எடுத்துக் கொண்டார். இந்த மூன்று மாத காலமும் நானே நி-27