பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 நினைவுக் குமிழிகள்-4 ஒரேர் உழவன் போல்’’’ தன்னந் தனியாக எம்.ஏ. வகுப் பிற்குக் கற்பித்து வந்தேன். சில சமயம் சோர்வு வந்து ஆட்கொண்டு விடும். ஒருவாறு பொறுத்துக் கொள்வேன். கற்பிப்பதை நிறுத்தி மாணவர்களை அனுப்பி விடுவேன். மாணவர்களும் என் நிலையைக் கண்டு கழிவிரக்கம் கொள்வர். இப்படியாக மூன்று திங்கள் கழிந்தன. இவற்றையெல்லாம் நினைவுகூரும்போது நிகழ்ச்சி கள் நடைபெற்றபோது உணர்ச்சி வசப்பட்டுக் கோப தாபங்கட்கு ஆளானாலும், இப்போது மன அமைதி கொள்ளுகின்றேன். தாமோதரன் நிலைக்கு இரக்கப்படு கின்றேன்; பெரிய மனிதராகத் திகழ்ந்த தெ.பொ.மீ. மனத்துாய்மைக்குப் பேர் போனவர். தாம் நினைக்கும் ஒருவருக்கு உதவும்போது இதனால் பாதிக்கப் பெறுபவர் ஒருவர் உள்ளார் என்பதைச் சிந்தித்தார் இலர். இஃது அவர்தம் இயல்பாக இருப்பதை அவர்தம் வாழ்க்கை யினின்றும் உணர முடிகின்றது. இவ்வாறு நான் பல்வேறு தொல்லைகட்கு ஆடப்பட்ட தற்கு என்னுடைய தீயூழ்தான் காரணம் என்று கருது கின்றேன்; மன அமைதியும் கொள்ளுகின்றேன். எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயன் என்ன? 7. புறம்-193. ஓரேர் உழவர் ஒரு wலவர்: குறுந். 131 என்பதில் இந்த உவமை வருகின்றது.