பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-210 54. தமிழ் எம்.ஏ. வகுப்புத் தொடக்க விழா சூலை மாதம் இறுதியில் எ. ஏ. வகுப்பு தொடங் கியது. அக்டோபர் 20 ந் தேதி வரை எனக்கு துணைப் பேராசிரியர் நியமன ஆணை பிறப்பிக்கப் பெறவில்லை. டாக்டர் ஞானமூர்த்தி தாம் வர இயலாது என்று எழுது வதற்கு மூன்று மாதகாலம் எடுத்துக் கொண்டார்! எனக்கு ஆணை பிறப்பித்த அன்றே திரு தாமோதர னுக்கும் ஆணை பிறப்பிக்கப் பெற்றது. ஆனால் அவர் திருப்பதி வருவதற்குத் தயங்கிக் கொண்டிருந்ததாக அறிந்து அவருக்குக் கடிதம் எழுதினேன்; வந்து சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்தி எழுதினேன். அவரும் வீடு பார்த்து வைக்கும்படி எழுதினார். நான் அப்போது கபில தீர்த்தம் சாலையிலுள்ள (கீழ்த்திசைக் கலைக் கல்லூரிக்கு எதிரில்) உமாமகேசுவரரெட்டிக் குடியிருப்பில், இருந்து கொண்டிருந்தேன். அக்குடியிருப்பில் பத்து வீடுகள் வரிசைக்கு ஐந்து வீதம் இரண்டு வரிசைகளில் அமைந்திருந்தன. அவற்றுள் ஒன்றில் குடியிருந்தவர் காலி செய்து கொண்டு போவது தெரிந்தது. அதனைத் திரு. தாமோதரனுக்குத் தருமாறு வேண்டினேன். நான் 1966-இல் வந்தபோது ரூ 80 வாடகை, தண்ணிருக்காக ரூ-10| தந்தேன். தாமோதரன் வந்த ஆண்டில் (1970) புதிதாக வருபவர்கட்கு ரூ-90 + ரூ 101. என்று உயர்த்தி விட்டார். எனக்கு (1966 க்கு முன்) குடியிருந்தவர்கள் ரு 70 + 10 தந்து கொண்டிருந்தனர். திரு. உமாமகேசுவர ரெட்டி உயர்ந்த மனிதர். ஒரு குறிப்பிட்ட வாடகைக்கு ஒருவர் வந்தால் அவர் காலி செய்யும் வரை வாடகையை உயர்த்த மாட்டார். புதிதாக வருபவர்கட்குத்தான்