பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 நினைவுக்குமிழிகள். இ உயர்த்திய வாடகை, நான் வந்த ஆண்டு வாடகை உயர்த்தப் பெற்றதால் ரூ 80 + 10 தர வேண்டி வந்தது. திரு. தாமோதரன் வந்தபோது ரூ 90 + 10 ஆக உயர்ந்தது. அதனால் அவர் ரூ 100/-தரும்படி நேர்ந்தது. இதனால் அவர் என்னுடைய செயலை ஐயுறத் தொடங்கினார். அவர் வீட்டுக்காரரிடம் இதைப் பற்றிப் பேசியபோது அவர் நிலைமையைத் தெளிவாக்கியும் அவர் என்மீது கொண்ட ஐயம் நீங்கவில்லை என்பதைச் சிலர் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது, நான் வீடு அமர்த்திக் கொடுத்தது பெரும் பிழை என்பதை நினைந்து வருந்தி னேன். நான் முதன் முதலாகக் குடும்பத்தை திருப்பதிக் கொணர்ந்தபோது (1966) மூன்று நண்பர்களிடம் ஒரு நல்ல வீடு பார்த்து வைக்குமாறு சொல்லிப் போயிருந் தேன். ஒருவரும் இதில் ஈடுபடவில்லை; எல்லோருமே செயற்படாது நழுவினர். ஒருவர்கடிட என் விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. திரு. தாமோதரன் போன்று 'ஐயுறும் பேர்வழிகளை நினைந்தே வீடு பார்ப்பதில் அக்கறை காட்டவில்லை. போலும்: என்பதை இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். நான் வீட்டிற்காகப் பத்து நாட்கள் அலைந்ததையும் இப்போது நினைவுகூர்கின்றேன். 1966-ல் நான் திருப்பதிக்குக் குடும்பத்துடன் வருவதற்கு முன் காரைக்குடியில் ரூபாய் பதினேழாராயிரத்துக்கு ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டில் பெரும்பாலான சாமான்களைப் போட்டுவிட்டு தேவைக்கு வேண்டிய சாமான்களை மட்டிலும் இருப்பூர்திப் பார்சலில் அனுப்பி விட்டுத் திருப்பதி வந்தோம். வந்தவுடன் தேவஸ்தான பழைய சத்திரத்தில் அறையொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு 10 நாட்கள் அதில் தங்கியிருந்தோம். விடுமுறை 10 நாட்கள் இருக்கும்போதே திருப்பதி வந்து சேர்ந்தோம். மலைமேல் இரண்டு நாட்கள் தங்கி