பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம். ஏ. வகுப்புத் தொடக்க விழா 42げ எம்பெருமா ன்ஏழுமலையானைச் சேவித்தோம். பிறகு திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், அலர் மங்கை புரத்தில் தாயார் இவர்களைச் சேவித்தோம். பத்து நாட்களும் நாங்கள் நால்வரும் உணவு விடுதியில்தான் உணவு கொண்டோம். நானும் என் மூத்த மகன் இராமலிங்கமும் (அப்போது பி. எஸ்.சி. வகுப்பில் சேர இருந்தவன்) திருப்பதி பூராவும் வீட்டிற்காக ஒரு வாரம் அலைத்து திரிந்தோம். நடுவண் அரசுப் பள்ளி கபில தீர்த்தம் சாலையில் இருந்தது சிறுவன் அதிக நடை யில்லாமல் பள்ளிக்கருகிலேயே வீடு அமர்த்த நினைந்து பள்ளியிருந்த பகுதியிலேயே வீட்டுக்கு அலைந்தோம். தெய்வசங்கல்பத்தால் பள்ளிக்கு எதிரிலிருந்த உமாபதி ரெட்டிக் குடியிருப்பிலேயே வீடு கிடைத்தது. திரு. தாமோதரனை இப்படி அலைய வைத்திருக்க வேண்டும்: நான் வீடு பார்த்துத் தந்தது பெருந் தவறு என்பதை இப்போது நினைந்து வருந்துகின்றேன். ஒரு மனிதருடைய பண்பை அறிந்து கொள்ள வேண்டுமானால் அவர்தம் செயல்களை நன்கு கவனிக்க வேண்டும். திரு. தாமோதரனின் செயல்களிலிருந்து அவர் பண்பை நன்கு அறிந்து கொண்டேன். அச்செயல்களை எல்லாம் நினைவுக்கு வந்தாலும் ஒன்றை மட்டிலும் ஈண்டுக் குறிப்பிடுவேன். நான் 1941 ஜூன் திங்கள் முதல் இந்து' என்னும் ஆங்கில நாளேட்டிற்குக் கட்டணம் செலுத்திப் படித்து வருபவன். திரு. தாமோதரன் திருப்பதியில் என் வீட்டருகில் குடியேறியவுடன் கட்டணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். அது வேண்டா; நானே செலுத்துவேன் . உங்கள் வீட்டில் தாளைப் போடுமாறு சொல்கிறேன்" நீங்கள் படித்துவிட்டு அனுப்புங்கள்: பிறகு நான் படித்துக் கொள்கிறேன்' என்று சொல்லி அவர் வீட்டில் போடுமாறு ஏற்பாடு செய்தேன். அவர் 'உங்கள் வீட்டில் மூவர் படி க் க ன் l iர் க ளா?