பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 நினைவுக் குமிழிகள்.தி (என் மைந்தர்கள் இருவரையும் சேர்த்து) என்றார்" இதனை என் இளைய மகன் இராமகிருஷ்ணன் (பத்தாவது படித்துக் கொண்டிருந்தவன்) செவியுற்று. * கட்டணத்தில் நாலில் ஒரு பங்கு கொடுக்கலாம். என்று நினைத்தார் போலும்! என்ன பெரிய பிசுநாறி” யாக இருப்பார் போலிருக்கின்றதே என்று அவர் பேச்சைத் திறனாய்வு செய்து விட்டான். அவர் கூறியதைப் பற்றிச் சிந்திக்க வில்லை; ஏதோ சொல்லு: கின்றார் என்று விட்டு விட்டேன். என் மகனின் கூர்ந்தமதி என்னை வியக்க வைத்தது. நானும் தாமோதரனும் அக்டோபரில் (1970) முன் பின்னாகப் பதவி ஏற்றோம். ஒரு சில நாட்களில் புதிய து ைற க ள் (தமிழ், சட்டம், மானிட இயல்: அரசியல்) தொடங்கும் விழா எடுக்கப் பெற்றது. எந்தவிழாவாக இருந்தாலும் துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டி மிகச் சிறிய விவரங்களிலும் கருத்தைச் செலுத்தி விழாவை மிகவும் பொலிவுடையதாகச் செய்வார். மூன்று நான்கு நிகழ்ச்சி களில் துறைகள் தொடங்குவதும் ஒன்று. நான்கு. அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதாக நினைவு. திரு. விசயபாஸ்கர ரெட்டி, திரு. பி. திம்மா ரெட்டி (வருவாய்த் துறை அமைச்சர்) கலந்து கொண்ட தாக நினைவு. விழா அக்டோபர் 25இல் (1970) நடை பெற்றது. திரு. பி. திம்மாரெட்டிதான் துறைகளைத் தொடங்கி வைத்தார். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் பல்கலைக் கழகத்தில் வைக்கப் பெற்றுள்ளது. விழா நடைபெற்ற அன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருப்பர். இஃது. அவரவர் இருக்கும் நிலையைப் பொறுத்தது. புதிதாகத் தொடங்கப் பெற்ற நான்கு துறைகளில் தமிழ்த் துறையைத் தவிர ஏனைய மூன்று துறைகளும் சுகப்