பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம். ஏ. வகுப்புத் தொடக்க விழா 423 பிரசவத்தில் பிறந்தவை. தமிழ்த்துறை ஒன்றுதான் ஆயுதப் பிரசவம் போல் அமைந்தது. ஏறக்குறைய பத்தாண்டுகள் (குழந்தைக்கரு வளர்வதற்குப் பத்துத் திங்கள்தான்) சென்னைத் தமிழ்ப் பயணமும் ஏறக்குறைய இக்காலத் தில் 100 நாட்கள் விடுப்பும், சில ஆயிர ரூபாய் சொந்தப் பொறுப்பில் ஏற்ற செலவும், தலைமைச் செயலகத்தில் வட்டமிட்டதும், "கண் மூடி மெளனியாக நிற்கும் ஏழுமலையானின் திருவுள்ளத்தைக் க வர் ந் தி ரு க் க வேண்டும். படமுடியா திணித்துயரம் பட்டதெல்லாம் போதும்’ என்ற மன நிலை ஏற்பட்டபோது எம் பெருமான் திருவருள் சுரந்தது. ஒரு சமயம் மானியத்திற்கு விண்ணப்பம் அனுப்பவே மறுத்ததும், அப்போது துணைவேந்தராக இருந்த 'வாமன மூர்த்தி துணை நின்று அனுப்பச் செய்ததும் பெரும் புலவர் மு. ரா. பெருமாள் முதலியாரும் திரு இராசாக்கண்ணனாரும் தமிழ்வளர்ச்சிப் பொறுப்பிலிருந்தும் சிறிதும் உதவாது * வளவள என்று கைவிரிப்புச் செய்ததும், கல்வித் துறை யில் துணைச் செயலாளராகப் பணியாற்றிய தமிழ்பற்று மிக்க திரு. கோ. முத்துப்பிள்ளை என்மீது கழிவிரக்கம் கொண்டு உதவ முன்வந்ததும், ஒல்லும் வகையெல்லாம் உதவியதும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் எழுகின்றன. 1960-முதல் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பெயரளவில் இருந்த தமிழ்த்துறை 1970 முதல் ஆல்போல் தளிர்த்தது: அருகுபோல் வேரூன்றியது. செயலாற்றும் துடிப்பும் நினைத்ததை முடிக்கும் எண்ணமும் மிக்க துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டி முத்தாய்ப்பு வைத்தமாதிரி என் முயற்சிக்கு மகுடம் சூட்டினார். இப்போது, எண்ணிய எண்ணியாங் கெய்து எண்ணியார் திண்ணியராகப் பெறின்' 1. குறள்-666.