பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நினைவுக் குமிழிகள்-4 என்ற பொய்யா மொழியின் உண்மை என் வாழ்க்கையி லேயே தெளிவாகின்றது, பதின்மூன்று ஆண்டுகள் மக்கள் பேறு வாய்க்கப் பெறாதிருந்தபோது புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சியிலேயே என் கவனம் சென்றதால் மக்கட்பேறு பற்றிய எண்ணம் என் மனத்தில் ஏழாதிருந்தது. என் மனைவியும் என் அன்னையும் தான் இதுபற்றி மிகவும் கவலைப் பட்டனர். அவர்கள் வற்புறுத்தலின்பேரில் இரண்டு மாத காலம் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டேன்: இராமேச்சுவரத்தில் பல்வேறு வைதிகக் கருமங்களை மேற் கொண்டேன். எனக்கு மக்கட்பேறு (1949) ஏற்பட்டது. அப்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியைவிட, இப்போது துறை பிறந்தபோது பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. விழாக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு திரு. பி. திம்மா ரெட்டி துறைகளைத் திறந்து வைத்த போது கண்கள் குளமாயின! இரண்டு கன்னத்திலும் நீர் வழியத் தொடங்கியது. அருகிலிருந்த அன்பர்கள் என்னவாயிற்று? ஏன் அழுகின்றீர்கள்? என்று கேட்க, 'ஒன்றுமில்லை; இஃது ஆனந்தக் கண்ணிர்!’ என்று மறுமொழி பகர்ந்து கண்ணிரைத் துடைத்துக் கொண்டேன். மேற்கு முகமாக மேடையை நோக்கி அமர்ந்திருந்த போது வட புறமாகப் பார்த்த போது வேங்கட வெற்பு என் கண்ணில் படுகின்றது 'திருவேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே” என்ற நம்மாழ்வார் வாக்கு நினைவிற்கு வருகின்றது. உடனே என்மனம் தேசிகனின் பாசுரத்தில் ஈடுபடுகின்றது. கண்ணனடி யிணையெமக்குக் காட்டும் வெற்பு; கடுவினையர் இருவரையும் கடியும் வெற்பு; திண்ணமிகு வீடென்னத் திகழும் வெற்பு: தெளிந்தபெருந் தீர்த்தங்கள் திகழும் வெற்பு; 2. திருவாய். 3.3.8,