பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருத்தலப் பயணம் 42莎 புண்ணியத்தின் புகலதெனப் புகழும்வெற்பு; பொன்னுலகின் போகமெலாம் புணர்க்கும்வெற்பு: விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு; வேங்கடவெற் பெனவிளங்கும் வேதவெற்பே. என்ற பாசுரத்தை மெல்ல ஒதுகின்றது என்மனம், குமிழி-21 1 55. மலை நாட்டுத் திருத்தலப் பயணம் பாண்டி நாட்டுத் திருத்தல வழிபாட்டை முடித்துக் கொண்டு நாகர்கோயிலில் வசதியாகத் தங்கியிருந்த போது எங்களுடைய மலைநாட்டுத் திருத்தலப் பயணம் தொடங்குகின்றது. முதல் நாள் காலை (1969-ஜூன் மாதம்) திருவண்பரிசாரம் என்ற திருத்தலத்திற்கு வரு கின்றோம். இது நாகர்கோயிலுக்கு வடதிசையில் நெல்லை-நாகர்கோயில் நெடுஞ்சாலையில் 2 கல் தொலைவிலுள்ளது. பேருந்து வசதி உண்டு. நகரப் பேருந்தில் ஏறி நெடுஞ்சாலையில் ஒரு வாய்க்கால் பாலத் தருகில் இறங்கி முக்கால் கல்தொலைவு நடந்து கோயிலை அடைய வேண்டும். மலைநாட்டுக் கோயிலின் களை’ இங்கேயே தென்படுகின்றது. எம்பெருமானின் திருநாமம் 'திருவாழ்மார்பன்' என்பது, நல்ல தமிழ்ப் பெயர். இது தான் வடமொழியில் சீநிவாசன் என்று வழங்குகின்றது. சீ(பூரீ)-திரு; நிவாஸ்-வாழ்கிற இடம். பெரிய பிராட்டியார் வாழ்கின்ற இடத்தையுடையவன் என்பது பொருளாதல் காண்க. அகிலல்லேன் இறையும் என்று 3. தே.பி. 82 (அதிகாரசங் கிரகம்-48)