பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 நினைவுக் குமிழிகள். தி. அலர்மேல் மங்கை உறையும் திருமார்பை உடையவன் அல்லவா? சேவையை முடித்துக் கொண்டு தங்கியிருந்த, இடத்திற்குத் திரும்பினோம். திருவண்பரிசாரம் என்ற ஊர் திருப்பதிசாரம் என்று மக்களிடையே வழங்கி வரு. கின்றது. திருப்பதி சென்று வந்தால் அதனால் கிடைக்கும். பலன்கள் எல்லாம் திருவண்பரிசாரத்திற்கு வந்தால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையே இப்பெயர் சிதைவுக் குக் காரணமாகின்றது என்று கருதலாம். நம்மாழ்வாரின் திருத்தாயார் உடைய நங்கையார் பிறந்த ஊர் இத்திருத் தலம். மாலையில் கன்னியாகுமரி வருகின்றோம். நீலத். திரைக்கடல் ஒரத்திலே-நித்தம் தவம் புரிந்து வரும் குமரித் தெய்வத்தை வணங்குகின்றோம். ஊரைச் சுற்றிப். பார்க்கின்றோம். விவேகாநந்தர் பாறையைத் தொலைவி லிருந்தே கண்டு மகிழ்கின்றோம்! எதிர்பாராத விதமாக அன்று பெளர்ணமி. கடலோரத்தில் நின்று கொண்டு. மேற்கே பகலவன் மறைவதையும் கிழக்கே முழுமதியம் உதயமாவதையும் ஒரே சமயத்தில் கண்டு களிக்கின் றோம். அதன்பிறகு சுசீந்திரம் வந்து தானுமாலயனைச் சேவித்துக்கொண்டு நாகர்கோவிலை வந்தடைகின்றோம். ஒரு நல்ல உணவு விடுதியில் சிற்றுண்டியை உண்டு தங்கி யிருந்த இடத்தை அடைந்து ஒய்வு கொள்ளுகின்றோம். அடுத்த நாள் அதிகாலையில் நீராட்டத்தை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிப் புறம் படுகின்றோம். வழியில் 16 கல் தொலைவில் உள்ள 'திருவாட்டாறு' என்ற திவ்விய தேசத்தில் இறங்கு கின்றோம். பேருந்தில் வரும் போதே இருபுறமுள்ள சோலைகள், தோட்டங்கள், நெல்வயல்கள். ஆறுகள், அவற்றினின்றும் கால்களாகப் பிரிந்து சென்று நிலங்களை வளமாச கும் கால்வாய்கள் இவற்றைக் கண்டு அநுபவித்த வண்ணம் இவ்வூரை ஆடைகின்றோம். ஆறும் அதன்