பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 427 கால்வாய்களும் சூழ்ந்திருப்பதால் 'திருவட்டாறுதிருவாட்டாறு என்ற பெயர் ஏற்பட்டிருக்குமோ என்பது ஊகம். திருவாட்டாறு’ என்ற திருப்பதியை நம்மாழ்வாரே நமக்கு நன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றார். திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு என்பதாக.அலர்மேல்மங்கை உறைமார்பன் வாழும் இடம் திருவாட்டாறு என்பது ஆழ்வாருடைய குறிப்பு. சாதாரணமாக உலக வழக்கில் எல்லோரும் திருவாளர், (சீமான்) என்று சொல்லப்பெறுகின்றனரே, அப்படி அன்று இங்கு. திருமங்கை தன்னோடும் திகழ்கையினாலே, அஃதாவது (தன்மார்பில்) திருவுடன் (இலக்குமியுடன்) விளங்குகின்றவனாதலின் உண்மையிலேயே திருவாட்டாற் றான் திருவாளர்' என்ற அடைமொழிக்குப் பாத்திரனா கின்றான். ஆதிகேசப் பெருமாள்' என்பது இத்திருப்பதி எம்பெருமானின் திருநாமம்; தாயாரின் பெயர் மரகதவல்லி. மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நமக்குச் சேவை சாதிக்கின்றான் எம்பெருமான். திருவனந்தபுரத்தி லிருப்பது போலவே, இங்கும் மூன்று சந்நிதிகள் உள்ளன. மூன்று சந்நிதிகளின் அளவுக்கு நீளப் பள்ளி கொண்டிருக்கின்றான் எம்பெருமான். இடப்புறச் சந்நிதி வழியாகத் திருமுக மண்டலக் காட்சி தருகின்றான். நடுவிலுள்ள சந்நிதி வழியாக அவனுடைய திருவுந்திக் கமலத்தைக் கண்டு களிக்கின்றோம். வலப் புறச் சந்நிதி வழியாகக் கழல் இணைகள் நம் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றன. 'என் அமுதினைக் கண்ட 1. திருவாய். 10, 6:: 9