பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4密8 நினைவுக் குமிழிகள்.4 கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்ற பாண் பெருமாளின் அநுபவத்தைப் பெறுகின்றோம். இத்திருக்கோவிலின் கருவறை, அர்த்த மண்டலம், இவ்விரண்டின் தளங்களும், ஒரே கல்லினாலானவை. ஆகவே, அர்த்தமண்டபத்திலிருந்த வண்ணம் பிரசாதங் களைப் பெற்றால் கருவறையின் தூய்மை கெட்டு விடும் என்று கருதி, அங்கு அவை வழங்கப் பெறுவதில்லை. அர்த்தமண்டபத்தினின்றும் இறங்கித் தரையிலிருந்த நிலை யில் சந்தனம், திருத்துழாய் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதி இன்றும் வழக்கத் திலிருந்து வருகின்றது. அடுத்து, திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, அனந்தபுரம் பயணமாகின்றோம். பேருந்து திருவனந்த புரத்தை நோக்கிச் செல்லுங்கால் எம்மருங்கும் அடர்ந்த தோப்புகள், ஓங்கி உயர்ந்த மலைக்குன்றுகள், பாங்குடன் திகழும் மணல் மேடுகள், பூக்கொத்துகள் குலாவும் குளிர் சோலைகள், குறுக்கும் நெடுக்குமாக வலைப் பின்னல் போன்றுள்ள பாய்ந்து செல்லும் சிற்றாறுகள், கால்வாய் கள் இவற்றை கண்டு களிக்கின்றோம். ஓங்குமரன் ஓங்கிமலை ஓங்கிமணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மித் தூங்குதிரை யாறு தவழ் சூழலது குன்று' என்று கம்பன் காட்டும் சூழ்நிலை நமது நினைவிற்கு வரு கின்றது. அகத்திய முனிவர் ஆசியுடன் வில்லும் வாளும் அம்பும் பெற்றுப் பஞ்சவடியை நோக்கி வரும் இராமனுக்கு பஞ்சவடி அமைந்துள்ள சூழ் நிலையைக்காட்டுவது இப்பாடல், நாகர் கோவிலிலிருந்து சுமார் ஐம்பது கல் 2. அமல . 16 3. கம்ப. ஆரணி-அகத்தி. 57