பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தவப் பயணம் 4密多 தொலைவிலுள்ள திருவனந்தபுரம் வரையிலும் தே சூழ்நிலைதான். சில இடங்களில் பகலவன் கதிர்களும் உள் புகா நிலை , நாம் செல்லும் பேருந்து நிலையத்தை அடைகின்றது. திருவனந்தபுரம் இருப்பூர்தி நிலையமும் பேருந்து நிலைய மும் எதிரெதிராக மிக அருகிலுள்ளன. அந்தப் பக்கத் திலேயே உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. 1948-மே மாதத்தில் மக்கட்பேறு ஏற்படாத முன்னர் தங்கியிருந்த குமரன்’ விடுதியிலேயே தங்குகின்றோம். நீராடிச் சிற்றுண்டி அருந்தி வந்த களைப்பைப் போக்கிக் கொள்ளுகின்றோம், மாலை ஐந்து மணி சுமாருக்குத்திருக் கோயில் செல்லுகின்றோம். திருக்கோயில் திருவாட் டாற்றுத் திருக்கோயில் போலவே சற்று உயரமான இடத் தில் அமைந்துள்ளது . பல படிகள் ஏறியே கோயிலினுள் நுழைதல் வேண்டும். கோயிலின் நாற்புறமும் கனமான கோட்டைச் சுவர்கள் சூழ்ந்துள்ளன. திருக்கோயிலுக் கருகிலேயே திருவாங்கூர் அரசர் அரண்மனையும் உள்ளது. அவர் அரண்மனையிலிருந்து திருக்கோயில் வந்து போவ தற்குத் தனிச் சுரங்க வழி உண்டு. அதனையும் காண் கின்றோம். கோயிலின் உட்பகுதியிலுள்ள பல இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்திற்கு வருகின்றோம். இந்த மண்டபத்தின் அடித்தளக் கருங்கல் 20 அடி சதுரத்தைக் கொண்டது; கனம் 2; அடி. இம் மண்டபம் ஒற்றைக்கல் மண்டபம் என்று வழங்கப்பெறுகின்றது. இத்தகைய அடித்தளக் கல்லையுடைய மண்டபத்தைத் திருவாட்டாற்றுத் திருக் கோயிலிலும் கண்டோம். கிட்டத்தட்ட இரண்டு கோயில் களும் ஒரே மாதிரி அமைப்பினைக் கொண்டவை. ஆ. லும் சிற்பங்கள் முதலியவற்றை நோக்கத் திருவாட்டாற்றுக் கோயில் பழைமையுடையதெனத் தோன்றுகின்றது. அங்குப் பெரும்பாலும் கேரள நாட்டுப் பாணி மீதுார்ந்து நிற்கின்றது. திருவனந்தபுரத் திருக்கோயிலில் தமிழ்ப்