பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 431 ஆறும் மற்றொரு பரிவு; திருக்காட்கரையும் திரு. மூழிக்களமும் வேறொரு பிரிவு: திருவித்துவக்கோடும் திருநாவாயும் பிறிதொரு பிரிவு. இந்த நான்கு பிரிவு களிலும் உள்ள திவ்விய தேசங்களை மங்களா சாசனம் செய்து அருளினவர் நம்மாழ்வார்; மூன்று பிரிவுகளில் உள்ளவற்றைப் பாடிச் சிறப்பித்தவர் திருமங்கையாழ்வர்; ஒரு பிரிவில் உள்ளவற்றை மட்டிலும் போற்றியுரைத்தவர் குலசேகரப் பெருமாள். கடையிலிருந்தவரிடம் இந்த நான்கு பிரிவிலுள்ள திருக்கோயில் விவரங்களைத் தெரிவித்தோம்; முதற் பிரிவிலுள்ளவற்றைச் சரியாகச் சேவித்து விட்டதாகவும் தெரிவித்தோம். இந்த விவரங்களைத் தொலை பேசி மூலம் கோட்டயத்திற்குத் தெரிவித்தார் கடையிலுள்ள பொறுப்பாளர். உடனே திருவேங்கட ரெட்டியார் கோட்டயம் வருமாறு பணித்தார். நாங்கள் இரவில் கடையருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் புறப்பட்டுக் கோட்டயம் சென்று கடையில் திரு. ரெட்டியாரைப் பார்த்தோம்.அவர் இரண்டு நாட்கள் எங்களைத் தம் விருந்தினராக வைத்துக் கொண்டார். நாங்கள் முற்பகல் 1 8 மணிக்கு வந்து அன்று முழுதும் ஒய்வு கொண்டோம். கோட்டயம் மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு நகரம். மிதிவண்டி அந்த ஊருக்குப் பயன்படாது. ஆட்டோ, டாக்சி தான் எங்கும் காணப்பட்டன். அடுத்த நாள் எங்களைக் காரில் இட்டுச் செல்லும் வண்டி யோட்டியை வரவழைத்துப் பேசினார். இரண்டாவது பிரிவிலுள்ள ஆறு திவ்விய தேசங்களும் கோட்டயத்திற்கு 25 கல் சுற்றளவிற்குள் இருப்பதைத் தெரிந்து கொண் டோம். மறுநாள் காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு போவதாகத் திட்டம் போட்டோம். திருவேங்கட ரெட்டியார் ஆலப்புழை வீரய்யா ரெட்டியாரின் முதல் திருமகனார்: சட்டம் படித்துக்