பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹品多 நினைவுக் குமிழிகள்-4 இடையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு. வியாபாரத்தைக் கவனித்து வந்தார். சீமாட்டி’ என்ற டெயரிலேயே கோட்டயம். கொல்லம், செங்கனாச்சேரி வேறு ஏதோ மூன்று இடங்களில் துணிக்கடைகள், இருந்தன. கேரளத்தில் துணிகளைக் கடனுக்குக் கொடுத்து வாங்கும் வியாபாரமே அதிகம். பாக்கியை வசூல் செய். வதற்கே இந்த ஆறு இடங்கட்கும் 17 அம்பாசடார் கார்கள் இருந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு - இந்த மூன்று நாட். களிலும் வசூல் செய்வதற்கென்றே பொறுப்புள்ளவர்கள் இந்தக் கார்களில் செல்வார்கள். ஆண்டொன்றுக்கு 60 கோடிக்குத் துணி வியாபாரம் நடக்குமாம். திருவேங்கட ரெட்டியாரின் திருமாளிகை அமைப்பு மிகவும் விநோதமாக இருந்தது; மூன்று மாடிக் கட்டடம் இது. இருப்பிடம் பல சாலைகள் போகவும் வரவும் உள்ள தெருவின் ஒரு மூலையில் கட்டப் பெற்ற கட்டடம்டு தர்ெதளம், முதல் தளம், இரண்டாவது ஆம் ஆகிய மூன்றிடங் கட்கும் கார் வந்து போக வசதிகள் உள்ளன. காலையில் சிற்றுண்டி உண்டவுடன் தரைதளத்திலிருந்து கடைக்குப் போகலாம்: பகலில் ஒய்வு கொள்ள நடுத்தளத் திற்கு வரலாம்; இரவில் படுக்கைக்காக இரண்டாவது தளத்திற்குக் காரில் வரலாம். திருவேங்கட ரெட்டியார் இவற்றையெல்லாம் எங்கட்குக் காட்டினார். மறுநாள் காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு எங்களைக் காரில் அனுப்பினார். வண்டி யோட்டி விவரம் தெரிந்த மனிதர். கேரளத்தில் திருக்கோயில்கள் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த நேரங்களில் இறைவனை தரிசிக்க முடியும். ஆகவே காலத்தை வீணாக்காமல் சுறுசுறுப்பாக இயங்குகின்றோம். முற்பகல் திருவாறன் இவிை, திருச்செங்குன்றுார், திருக்கடித்தானம், திருவல்லம் வாழ் என்று நான்கு தலங்களையும் மாலையில்