பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 金) திருவண் வண்டுர், திருப்புலியூர், என்ற இரண்டு தலங்களை யும் சேவித்துக் கோட்டயம் வந்து சேர மாலை 7; மணியா கின்றது, இரவு உணவிற்குப் பின் ஒய்வு கொள்கின்றோம். அடுத்த நாள் சிற்றுண்டிக்குப் பிறகு இருப்பூர்தி நிலையத் திற்கு எங்களைக் காரியில் அனுப்புகின்றார் திருவேங்கடம் ரெட்டியார். இதற்குள் எர்ணாகுளத்தில் தங்கி திருக் காட்கரை, திருமூழிக்களம் என்ற இரண்டு தலங்களையும் சேவிக்க வேண்டும் என்பதை அறிகின்றோம். எர்ணாகுளத்தில் விடுதியொன்றில் தங்குகின்றோம். உணவு முதலியவற்றை இருப்பூர்தி நிலையத்தில் கொள்ள ஏற்பாடு செய்து கொள்ளுகின்றோம். ஒருநாள் காலை திருக்காட்கரை போகின்றோம், இத்திருத்தலம் எர்ணா குளத்திலிருந்து சுமார் 10 கல் தொலைவில் உள்ளது. பேருந்து வசதியுண்டு; ஆனால் அடிக்கடி இல்லை. புதிய இடம் ஆகையால் விசாரித்துக் கொண்டு போவதில் தாமதம். திருக்கோயிலை அடையும் போது முற்பகல் 11 மணிக்கு மேல் ஆய்விட்டது. கோயில் சாத்தப் பட்டு விட்டது. 12 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை காத்திருக்க நேரிட்டுவிட்டது; காத்திரு தோம். மாலை ஐந்து மணிக்குத்தான் சேவித்தோம், நம்மாழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்த திருத்தலம். இத்தலத் திற்குரிய பதிகம் மிகவும் அற்புதமானது.ஒரு பாசுரம்: வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்; நி-28