பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 நினைவுக் குமிழிகள்-4 கார்ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே." என்பது. இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கி விடுவதாக ஆசைப் பட்டிருந்தார் ஆழ்வார்; ஆனால் இப்படிச்செய்யவேண்டும் என்று தனக்கு முன்பே இறைவன் எண்ணித் தன்னை அடியோடு பருகிவிட்டான்.ஆழ்வாருக்கு இறைவன் உண்ணும் சோறு பருகும் நீர்' என்னலாம் படி இருந்தான். அங்ங்னமே இறைவனுக்கும் ஆழ்வார் உண்ணும் சோறு பருகும் நீர்’ என்று ஆகிவிட்டார். திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம். திருக்காட்கரை அப்பனையும் பெருஞ்செல்வ நாயகியை யும் சேவித்து விட்டு மாலை ஆறு மணிக்குத் திரும் பு கின்றோம். அடிக்கடி பேருந்துகள் இல்லாததால் தொல்லைகள். வழியில் ஓரிடத்தில் பெரிய சாலை புதிதாக போடப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அது புதிதாகத் திறக்கப்பெற்றுள்ள கொச்சிப் பல்கலைக் கழகத்திற்குப் போகும்வழி என்று சொன்னார்கள், சரியாக மாலை ஏழு மணிக்கு தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்கின்றோம். இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து இரவு உணவுகொண்டு ஒய்வு கொள்ளுகின்றோம். மறுநாள் காலை திருமூழிக்களம் போய்வர எண்ணு கின்றோம். இந்த ஊர் எர்ணாகுளம் ஷோரனூர் இருப்புப் பாதையிலுள்ள ஆல்வே நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இவ்வூரை அடைய வேண்டும் என்ற செய்தியை அறிந்து கொண்டு சரியாகக் காலை 7, மணிக்குப் புறப்படுகின்றோம் இருப்பூர்தியில்.அங்கு 10 கல் தொலைவு பேருந்தில் சென்று ஓரிடத்தில் இறங்கி 60 ക്ഷ-ജ-ബഞ്ഞ് 5. திருவாய் 9.6.10 6. , , 6.7.1.