பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 435 கெஜ தூரம் நடந்து திருக்கோயிலை அடைகின்றோம். நம்மாழ்வார் இத்தலத்து எம்பெருமானை நாயகி நிலையி லிருந்து தூது விடுவதாக அமைந்த பாசுரத்தால் சேவிக் கின்றார். அற்புதமான பதிகம் இது. பாசுரங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்து திருமூழிக்களத்தானையும் மதுரவேணி நாச்சியாரையும் சேவிக்கின்றோம். அங்கிருந்து திரும்பி பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் வந்து சேர்கின்றோம்; பகலுணவு இருப்பூர்தி நிலையத்திலுள்ள உணவு விடுதியில் அறைக்குச் சென்று காவி செய்து விட்டு சாமான்களுடன் மீண்டும் நிலையத்துக்கு வந்து சேர் கின்றோம். இன்று குருவாயூர் அப்பனைச் சேவிக்க வேண்டும் என்பது திட்டம். நீண்ட தூரம் கடக்க வேண்டியிருப்பதால் இருப்பூர்திப் பயணமே சிறந்தது. விரைவு வண்டி யொன்றில் ஏறி திருச்சூர் வந்து சேர்கின்றோம். அங்கிருந்து சுமார் 15 கல் தொலைவு பேருந்தில் பயணம் செய்து குருவாயூரை அடைகின்றோம். பலத்த மழையில் மாட்டிக் கொண்டு மிக்க சிர மத்துடன் வந்து சேர்கின்றோம். தெய்வ சங்கல்பத்தால் மிக்க சிரமத்துடன் தேவஸ்தான விடுதியில் தங்குவதற்கு ஒர் அறை கிடைக் கின்றது. அதில் தங்குகின்றோம். ஏதோ ஒர் உணவு விடுதி கயில் உணவு கொண்டு இரவில் ஒய்வு. மறுநாள் காலை குருவாயூர் அப்பன் சேவை. அன்று காலையில் சந்தனக் காப்புடன் திகழ்ந்தான் கிருஷ்ணன். அழகெல்லாம் திரண்டு ஒரிடத்தில் இருந்தாற்போன்ற திருமேனியில் உள்ளத்தைப் பறிகொடுத்தோம், இத்திருக்கோயிலில் துலாபாரப் பிரார்த்தனைக்கும் வழி செய்திருப்பதைக் கண்டோம். கோயிலிலிருந்து திரும்பும்போது கோயிலின் அருகில் பல யானைகளைக் கண்டோம். இக்காட்சி எங்கள் மனத்தைக் கவர்ந்தது. அறையைக் காலி செய்து கொண்டு இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து வண்டியேறி ஷோரனூர் வந்தோம்,