பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每岛6 நினைவுக் குமிழிகள்-4 அங்கு ஒரு இஸ்லாமியருக்குரிய தங்கும் விடுதியில் தங்கினோம். இந்த ஊரில் எங்கும் மரக்கறி உணவு விடுதி இல்லை. இருப்பூர்தி நிலையத்தில் உள்ள விடுதியிலும் உணவு சரியாக இல்லை. உணவுக்கு மிகவும் சிரமப் பட்டோம். வந்த அன்று மறுநாள் காலையில் திருநாவாய் என்ற திவ்விய தேசத்தைச் சேவிக்க நினைத்தோம் . இது ஷோரனூர்-மங்களுர் இருப்பூர்தி வழியில் 25 கல் தொலைவிலுள்ளது. திருநாவாய் ஓர் இருப்பூர்தி நிலையம். நிலையத்திலிருந்து திவ்விய தேசம் 1; கல் தொலைவிலுள்ளது. நடராஜா சர்விசைத் தவிர வேறு. வழி இல்லை. நடந்து சென்றுதான் சேவிக்கின்றோம். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்த எம். பெருமானை மங்களாசாசனம் .ெ ச ய் துள் ளன ர். நம்மாழ்வாரின் பாசுரம் தலைவி பாசுரமாக நடைபெறு: கின்றது. பராங்குச நாயகி இருந்த இடத்திலிருந்து கொண்டே எம்பெருமானை அநுபவிக்கின்றாள். அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்தொன்றிய சிந்தையி னார்க்கு வெறித்தண் மலர்ச்சோலைகள் சூழ்த்திரு நாவாய் குறுக்கும் வகையுண்டு கொலோ கொடி யேற்கே" "அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராதவமுதமாக இருக்கும் எம்பெருமானைத் தங்கள் உள்ளத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினையுடைய வர்கட்கு திருநாவாய் அண்மைக்கு வரும்படியான உபாயம் உண்டோ? என்பது பராங்குச நாயகியின் 7. திருவாய் 9.8:1