பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 玺3? எண்ணம். வினையாயின என்பதனால் விரோதிகளைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். அந்த விரோதிகள் சொரூப விரோதி, உபாய விரோதி, பிராப்ய விரோதி என்று திருமத்திரத்தில் கூறப்பெறும் மூன்று விரோதிகளாகும்." இவற்றைத் தவிர சஞ்சிதம் (பழவினை), பிராரப்தம் (துகர் வினை), ஆகாயியம் (எதிர்வினை) போன்ற வினைத் தொகுதிகளும் உள்ளன. இவையனைத்தும் அடங்கி யவையே வினையாயின வாகும் எம்பெருமானை உள்ளத் தில் நிலை நிறுத் தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களிடம் இவ்விரோதிகள் யாவும் அணுகா என்பது கருத்து. பராங்குசநாயகி 'வெறித்தண்...கொடியேற்கே என்ப தில் அந்தத் திவ்விய தேசத்திற்கு அண்மையில் வாழும்படி யான உபாயம் உண்டோ? என்று எண்ணுகின்றாள். * குறுக்கும் வகை" என்பது மலையாள மொழி வழக்காகப் பாட்டில் அமைந்து கிடக்கின்றது. இதுபற்றி ஓர் ஐதிகம் சொல்லுவதுண்டு. ஒரு சமயம் இராமாநுசர் மலைநாட்டுத் திருத்தலப் பயணமாகச் சென்றிருந்தார். திருநாவாங்க்கு அணித்தாகப் போய்க்கொண்டிருக்கும்பொழுது எதிரிலே வந்து கொண்டிருந்த மலையாளர்களை நோக்கி "திருநாவாய் எவ்வளவு தூரமுண்டு என்று வினவ, அவர்கள் குறுக்கும் என்றார்கள்; அண்மையில் உள்ளது என்பது . இதன் பொருள், எம்பெருமானார் இதனைக் கேட்டு இப்பகுதிமொழியாலேயன்றோ அருளிச் செய்துள் ளார் ஆழ்வார்?' என்று பாசுரத்தில் மிகவும் ஈடுபட்டதாக ஒரு வரலாறு உண்டு. திரும்பி இருப்பூர்தியில் வரும்போது பட்டாம்பி என்ற நிலையத்திற்கு அருகே வண்டி வருங்கால் பாரதம் புழா என்ற ஆறும் அதன் கரையிலுள்ள திருவித்துவக் கோட்டம்மான் திருக்கோயிலும் தென்படுகின்றன. வண்டி 8. முழுட்சுப்படி-83, 84, 85