பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 நினைவுக் குமிழிகள்-4 யிலிருந்த வண்ணம் அந்த அம்மானுக்கு ஒரு கும்பிடு” போடுகின்றோம்; 11-30 மணிக்கு ஷோரனூர் வந்து விடுகின்றோம். நிலையத்திலுள்ள உணவு விடுதியில் உணவு கொண்டு அறைக்குத்திரும்பி ஓய்வு கொள்ளுகின்றோம். மாலையில் பேருந்து நிலையம் வந்து திருமிற்றக்கோடு” என்ற ஊருக்குப் புறப்படுகின்றோம். இவ்வூருக்கு அடிக்கடி பேருந்து வசதி உண்டு. இந்த ஊர் ஷோரனூர்குருவாயூர் நெடுஞ்சாலையில் ஷோரனூரிலிருந்து 10 கல் தொலைவிலுள்ளது. சாலையின் மேலேயே ஊர் உள்ளது. நாம் திருமலைக்குப்பேருந்தில் செல்லும்போது கொண்டை ஊசி வளைவுப் பாதையில் பேருந்து செல்லும்போது மலையின் இயற்கைக் காட்சியில் நுகர்ந்தவண்ணம் செல்வதைப் போலவே, ஷோரனுாருக்கும் வித்துவக் கோட்டிற்கும் இடையிலுள்ள ஒரு பெருங்குன்றினை இத்தகைய வளைவுப் பாதையில் நாம் செல்லும்போது: மலையின் இயற்கைக் காட்சியில் தோய்ந்த வண்ணம் செல்லுகின்றோம். எங்கோ பிறந்து வளர்ந்த பாரதப் புழா என்ற ஆறு வளைந்து வளைந்து சென்று வித்துவக் கோட்டு அம்மானை நாடி அவன் திருவடிகளை வருடிச் செல்லும் அற்புதக் காட்சியினைக் கண்டு களிக்கலாம், நாம் மலைப் பாதையில் வளைந்து வளைந்து செல்லும் போதெல்லாம் வளைந்து வளைந்து செல்லும் ஆற்றையும் பலமுறை கண்டு அதுபவிக்கின்றோம், இங்ங்ணம் போய்க் கொண்டிருக்கும்போது தெளிது ஆக உள்ளத்தைச் செந்நீறீஇ ஞானத்து எளிது.ஆக நன்கு உணர்வார் சிந்தை - எளிது ஆகத் தாய்நாடு கன்றேபோல் தண்துழா யான்அடிக்கே போய்நாடிக் கொள்ளும் புரிந்து." 9. முதல். திருவந்.39