பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 439 என்ற பொய்கையாழ்வாரின் வாக்கு பண்பட்ட நம் உள்ளத்தில் குமிழியிட்டு எழுகின்றது. பல்லாயிரப் பசுத் திரளினுள் ஒரு சிறிய கன்று தன் தாயைக் கண்டறிந்து ஆவலுடன் அதனையடைவது போலவே, பரமான் மா-சிவா ன்மா உறவை நன்கறிந்த நம் மனம் பதறிக் கொண்டு அவ் வெம்பெருமானையே எண்ணிய வண்ணம் மிக ஆவலுடன் செல்லும் உணர்ச்சியைப் பெறுவதை உணரலாம். வித்துக்கோடு என்ற ஊரில் இறங்கி வலப்புறமாகத் தோப்புகளினிடையே ஒரு சிறு சாலை வழியாக நான்கு ஃபர் லாங்கு தொலைவு நடந்து கோயிலை அடை கின்றோம். கோயில் பெரிய கோயிலன்று. ஒரே ஒரு பிரகாரத்தைக் கொண்டது. இந்தப் பெருமாள் மிக அழகானவர் ! நாங்கள் சென்றபோது சந்தனக்காப்புடன் திகழ்ந்தார். நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திரு முகமண்டலத்துடன் சேவை சாதிக்கும் உய்ய வந்த பெருமாளையும் தாயார் வித்துவக்கோட்டு வல்லி நாச்சியாரையும் சேவிக்கின்றோம். குலசேகரப் பெருமாள் மங்களாசாசனம் செய்த பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன. சீமன் நாராயணனையன்றித் தமக்கு வேறு சரணமில்லாமையை ஆழ்வார் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வற்புறுத்திக் கூறியுள்ளமையை நினைந்து போற்றுகின்றோம். தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை; விரைகுழுவும் மலர்ப் பொழில்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே!