பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 f) நினைவுக் குமிழிகள்-4 அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி! அதுவேபோன்று இருந்தே னே." எம்பெருமானைத் தாயாகப் பாவித்து நாம் குழந்தை நிலைக்கு வந்து விடுகின்றோம். சினத்தினால் ஒரு தாய் தான் பெற்ற குழவியை ஒரு சமயம் வெறுத்துத் தள்ளினா லும், தாயின் கருணையையே கருதி குழந்தை அழுது அழுது அவன் கருணைக்குப் பாத்திரமாகின்றது. "அழுதால் உன்னைப் பெறலாமே" என்றபடி அழுது அடி அடைந்த மணிவாசகரைப் போலவே , கண்களில் நீர்மல்க அழுகின்றோம். இந்நிலையில் பரமான்மாவுக்கும் சீவான்மாவுக்கும் உள்ள உறவு முறை தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு முறை போன்றது என்ற உணர்வில் ஆழ்ந்து நிற்கின்றோம். இப்பதிகத்திலுள்ள உவமை கள் யாவும்.கேரள நாட்டு வாழ்க்கையைச்சித்திரிப்பனவாக அமைந்துள்ளன. நாம் வந்த அன்று எங்கோ மழை பெய்து திடீரென்று ஆறு வெள்ளப்பெருக் கோடியதைக் கண்டு வியந்தோம்! பின்னர்ப் பேருந்தில் திரும்பி ஷோரனுரர் வந்து சேர்ந்தோம். அன்றிரவே இருப்பூர்தியில் ஏறிகோவை வந்து சேர்ந்தோம். பழநியாண்டியைச் சேவிக்க வேண்டும் என்ற அவாவால் உந்தப்பெற்று கோவையிலிருந்து பழ நி வந்தடைந்தோம். அப்போது காலை மணி ஐந்து. தேவஸ்தானத்து விடுதியொன்றில் அறையொன்றை ஒதுக்கீடு செய்து வைத்திருந்தார் ஆ.மு, பரிமணம் (தமிழ்ப் பேராசிரியர், பழநி யாண்டவர் பண்பாட்டுக் கல்லூரி). நாங்கள் நீராடி மலைக்குப் போகத் தயாராக இருந்த போது எங்களை வந்து சந்தித்தார். விபூதி, பஞ்சாமிர்தம் 10. பெரு திரு. 5 : 11. திருவா. திருச்சத. 90