பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 441 வாங்க வேண்டுமானால் சித்தநாதன் கடையில்வாங்குமாறு பணித்தார். இனி அலைய வேண்டாம் என்று சொல்லி யனுப்பினோம்; அன்று மாலையே கோவை புறப்படுவதாக வும் கூறினோம் . காலை 6.30க்கு சிற்றுண்டி உண்டு மலை ஏறினோம். மலை ஏறுவதில் இருகுமாரர்களும் உற்சாகம் காட்டினர். நல்லதரினம் ஆயிற்று. நாளென் செயும்வினை தானென் செயும்.எனை நாடிவந்த கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன் னேவந்து தோன்றி.டினே." என்ற அருணகிரியாரின் வாக்கால் சேவித்தோம். கோயிலைச் சுற்றினோம். திருச்சுற்றில் குடிநீர்க்குழாய் கள் பொருத்தப் பெற்றிருந்தன; அதில் நீர் பருகினோம். மலையேறுவதற்கு இருப்பூர்தி வசதி செய்யப்பெற்றிருந்த தையும்.அதில் ஏறி வருவதையும் இறங்கிச் செல்வதையும் பார்த்துக் கொண்டு படி வழியாகவே இறங்கினோம் . மலையடிவாரத்தில் சித்ததாதன் கடையில் விபூதிப் பொட்டலங்களையும் பஞ்சாமிர்தத்தையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம், வரும்வழியில் சரவணப் பொய்கையை என் குமாரர்களுக்குக் காட்டி அதன் வரலாற்றைக் கூறினேன். 12. கந்து அலங் : 38