பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 443: திருமுருகாற்றுப் படையில் குறிப்பிடப் பெற்றுள்ள செய்தி இது : பிரணவத்தின் பொருள் அறியாத நான் முகன் முருகனால் சிறையிடப் பெற்றான். அந்த நான் முகனை விடுவிப்பதற்காக முன்னே முனிவர்கள் புக, அவர்கட்குப் பின்னர் கந்தருவரும் அவர் மகளிரும் பாடிவர, புள்ளணி நீள் கொடிச் செல்வனும் (திருமால்), மூவெயில்முறுக்கிய முரண்மிகு செல்வனும்(சிவபெருமான்), யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் (இந்திரன்), மூப்பத்து மூவர் தேவருடனும் பதினெண் கணங்களுடனும் திருவாவிநன்குடிக்கு வருகின்றனர். உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் வேறொரு வரலாற்றைக்குறிப்பிடுவர்: முருகன் சூரனையும் அவுணர் களையும் வென்று அமரலோகத்தைப் பழையபடியே தேவர்கட்கு உரிமையாக்குகின்றான். இதற்கு நன்றி யறிதலைக் காட்டும் முகத்தான் இந்திரன் தன் மகள் தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றான். முருகன் அப்பொழுது தன் வேலே இந்த வெற்றிச் செயலுக்குக் காரணம் என்று கூறுகின்றான். அது கேட்ட நான்முகன் அந்த வேலிற்குரிய ஆற்றல் தன்னால்தான் வந்தது என்று தருக்கிக் கூறுகின்றான் இதனைப் பொறாத முருகன் நான்முகனைப் பூமியில் பிறக்குமாறு சாபம் இடுகின்றான். அச்சாபத்தின்படி பூமியில் பிறந்துழலும் நான் முகனின் சாபத்தைப் போக்கி யருளுமாறு முறையிடுவதற்காகவே இவர்கள் பூமிக்கு வருகின்றனர் என்பதாக . இந்தப் பழநிக்கு நான் வந்தது நான்காவது பயணம்" முதற் பயணம் 1928-இல் என க்கு முடி இறக்குவதற்காக வந்தது. சில மாதங்களில் என் தம்பிக்கு முடி இறக்குவதற் காக வந்தது இரண்டாவது பயணம். 1956-இல் என் மக்கள் இருவருக்கும் முடி இறக்குவதற்காக வந்தது. மூன்றாவது பயணம். முதற்பயணத்தின் போதும் மூன்றாவது பயணத் தின் போதும் என் அன்னையார் எங்களுடன் வந்தார்.