பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 நினைவுக் குமிழிகள்-4 இந்தப் பயணத்தில் அறைக்குத் திரும்பும் போது பகல் 12 மணி; வழியில் ஒரு விடுதியில் உணவு கொண்டு திரும்பி னோம். மாலை 3 மணிக்கு இருப்பூர்தியில் ஏறிக் கோவை வந்து சேர்ந்தோம். அன்றிரவே நீலகிரி விரைவு வண்டியில் ஏறி இரவு 11: மணிக்கு சேலம் (சூரமங்கலம்) சந்திப்பை வந்து சேர்ந் தோம். நிலையத்தில் ஒய்வு கொள்ளும் அறை கிடைக்காத தால் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு சேலத் திற்கு (டவுன்) வந்து ஒரு விடுதியில் தங்கினோம் . அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து நீராட்டத்தை முடித்துக் கொண்டு சிற்றுண்டி உண்டு சூரமங்கலம் வந்து சேர்ந்தோம். 6-30 மணிக்கு மேட்டுர் செல்லும் இருப்பூர்தி ஏறி சுமார் 8-15க்கு மேட்டுரை அடைந்தோம். அணையை நடந்தே பார்த்தோம். முதலில் மிதமிஞ்சிய தண்ணிர் வெளிப்படுவதற்கு ஏற்பாடாகவுள்ள 16 கண்கள் உள்ள இடத்திற்கு வந்தோம். அடுத்து அணையின் மீதே நடந்து தென் கோடிவரையிலும் வந்தோம். கோடை காலமாத லால் அணையில் தண்ணிர் அதிகமாக இல்லை. மேலிருந்த படி அணைக்கீழ்புறம் உள்ள இடங்களைப் பார்த்தோம். பூங்காக்கள் யாவும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டோம். தென்கோடியில் இறங்கி அணைக்கு உட்புற மாகவுள்ள சுரங்கப் பாதையை வெளியிலிருந்தே கண்டோம்; உள்ளே செல்ல இசைவு பெறமுடியவில்லை, இந்தப்பாதை அமைப்பினால் எவ்வளவோ கல், சிமிட்டி மிச்சம் என்பதை என் குமாரர்கட்கு விளக்கினேன். பசி வந்து விட்டது. கையிலிருந்த பிஸ்கெட் பொட்டலத்தைப் பிரித்து உண்டு பசியை ஒருவாறு போக்கிக் கொண்டோம்; குடிநீருக்குப் பஞ்சம் இல்லை. இப்படி நடந்து கொண்டே மேட்டுருக்கு வரும் போது நேரம் 2-மணி. ஒர் உணவு விடுதியில் உணவு உண்டு அரைமணி நேரம் இளைப்பாறி பேருந்து நில்ையத்திற்கு வந்து பேருந்தில் சேலம் திரும்பி னோம். இப்போது மாலை மணி 3.50.