பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 445. இந்த மேட்டுர்ப் பயணம் எனது நான்காவது பயண மாகும், முதல் பயணம் 1933 ஆகஸ்டில் (நான் ஐந்தாவது படிவம் முசிறியில் பயின்றபோது) மேற்கொண்ட சுற்றுலா வாகும். அப்போது அணை வேலை முற்றுப் பெறா திருந்தது, எல்லா வேலைகளும் ஒருவாறு முடிந்து நடுவில் சுமார் 100 அடி மூடப் பெறாதிருந்த நிலை . 1949 சனவரியில் நான் என் மாமனார் வீட்டில்(பொட்டணத்தில்) இருந்தபோது நான் என் மனைவி, மனைவியின் தாயார், மாமனார் ஆகிய நால்வரும் வந்தோம். இது என் இரண்டாவது பயணம். 1948 டிசம்பர் மாதத்தில் என் நண்பர் A. இராமசாமியைப் பார்க்க வந்தேன். இது என் மூன்றாவது பயணம். அப்போது என் நண்பர் ஒய். ஆர். குருசாமி (என் ஆசிரியர் இராமச்சந்திர அய்யர் மகன்) இல்லத்தில் மாலை சிற்றுண்டி காஃபி அருந்தியது என் நினைவில் இன்றும் (ஏப்பிரல் 1990) பசுமையாக உள்ளது. முதல் தடவைச் செலவு என் அன்னை தந்த பணத்தால் நடைபெற்றது. இரண்டாவது தடவை செலவானது என் மாமனார் பணம். மூன்றாம் தடவையும் நான்காம் தடவையும் செலவானது நான் ஈட்டிய பணம். அன்று இரவு நீலகிரி விரைவு வண்டியில் ஏறி அதிகாலையில் 3.30க்கு காட்டுப்பாடி வந்து சேர்ந்தோம்: ஐந்து மணிக்கு வேறொரு வண்டி ஏறி காலை 8-மணி சுமாருக். த் திருப்பதி வந்து சேர்ந்தோம். திருப்பதி வந்த பிறகு 1970-ஜூன் மாதம் எம். ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றது. 1971 - சனவரியில் பல்கலைக் கழகத்தில் பிரகாசம் நகரில் துணைப் பேராசியருக்குரிய வீடு (8, ரீடர் குடியிருப்பு, பிரகாசம் நகர்) கிடைத்தது. உமாமகேசுவர ரெட்டிக் குடியிருப்பில் இருந்தபோது மலைநாட்டு திருப்பதிப் பயணத்தை 13 கட்டுரைகளாக எழுதி முடித் தேன். இந்தப் பதின்மூன்று கட்டுரைகளிலும் ஆழ்வார் களின் பக்தியுணர்ச்சியின் கொடு முடிகளைக் காணலாம். சில இடங்களில் சுட்டப் பெற்றுள்ள எடுத்துக்காட்டுகளால்