பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.S நினைவுக் குமிழிகள் 4}یہ۔ பாசுரத்தின் சொல் வளத்தையும், உரையின் நயத்தினை யும் உணரலாம். பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் துறைகள் அமைந்துள்ள சிறப்பைக் கண்டு சுவைக்கலாம். எல்லாக் கட்டுரைகளிலுமே ஆசாரி ஹிருதயத்தின் நாடி துடிப்பதனை அறியலாம் இக்கட்டுரைகளைப் படிப்போரி டையே வைணவ இலக்கியத்தின்பால் அவாவினை எழுப்பு வதையும் உணரலாம். இந்த பக்திப் பனுவலுக்கு-திருத்தலப்பயண நூலுக்குஅணிந்துரை வழங்கி ஆசி கூறியவர் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். மகராசன் அவர்கள். இந்த நூலைக் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகளின் எண்பதாவது ஆண்டு நிறைவில் (சதாபிஷேகம்) நடை பெற்ற அகண்ட திவ்வியப் பிரபந்த சேவையின்போது அந்த அடியார் திருக்கூட்டத்தில் பழவகைகளுடன், வடமொழிச் சுவையை தென்றமிழ்ப் பயனை மாநிலம் வியப்புறப் பருகித் திடமுறு ஞானக் கொண்டாலாய் வளர்ந்து சேதனர் எனும்பயிர் முளைக்கக் கடலுல குவக்க மழைபொழி அண்ணங் கரரவர் திருவடி மலரில் சுடர்மிகப் பெற்று வயங்குக என்றித் துரயறுால் சமர்ப்பணம் புரிந்தேன் என்ற பாடலால் அன்புப்படையலாக்கினேன். எஸ். ஆர். சுப்பிரமணியப் பிள்ளையவர்களால் வெளியிடப் பெற்ற (மார்ச்சு-1971) மலைநாட்டுத்திருப்பதிகள் என்ற இந்நூல் என்னுடைய இருபத்துமூன்றாவது வெளியீடாகும். இந்த நூலை ஒரே மூச்சில் படித்து முடித்த அண்ணங் கராசாரிய சுவாமிகள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிப்பது : உண்மையில் பக்தர்கட்கு இந்நூல் நல் விருந்து. ஜஸ்டிஸ் முன்னுரை மிகப் பொருத்தமாக அமைந்