பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நாட்டுத் திருத்தலப் பயணம் 委垒7 துள்ளது...... 'திருக்கோயில் பத்திரிகை தொடக்கமான காலத்தில் மலைநாட்டுத் திருப்பதியதுபவம்” என்ற கட்டுரை இரண்டாண்டளவும் எழுதித் தந்தேன். பிரசுர மாயிற்று...... அதனிற் சிறந்த அநுபவம் உமது என்று அறுதியிட்டேன். அடிக்கடியெடுத்து வாசிக்கத் தூண்டும் நூலிது.” கிடைத்தற்கரிய பாராட்டு இது. இதைச் சுவாமி களின் ஆசியாகப் போற்றுகின்றேன். குமிழி-2 12 56. பரணிப் பொழிவுகள் 1965-66 ஆண்டில் நான் முன்னிருந்து தொடங்கி நிலை பெறச் செய்த பாக்காலா தமிழ்ச் சங்கம் அவ்வூரில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பெருமக்களும் பேரளவில் QCŞūgsfää & so pujá (Railway Department) LóGap, நிலைகளில் பணியாற்றும் தமிழ் மக்களும் பயன்படும்படி யாகக் கலிங்கத்துப் பரணி என்ற சிற்றிலக்கியத்தில் ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தத் திட்டமிட்டேன். இவை திருவேங்கடம் பல்கலைக்கழகம், பாக்காலா தமிழ்ச்சங்கம் இரண்டின் கூட்டு ஆதரவில் விரிவுச் சொற்பொழிவுகள்’ என்ற திட்டத்தில் நடைபெற்றன. ஆறுவாரங்களில் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு இவை வழக்கமாக நடை பெற்றன. பாக்காலாவில் இவற்றைப் பொறுப்புடன் முன்னின்று நடத்தியவர்கள் திரு. ஜகதீசன் (நலவாழ்வு அதிகாரி, இருப்பூர்தித் துறை), இருப்பூர்தித் துறையின் கீழ் நடைபெற்ற பள்ளியின் தலைமையாசிரியர் .ே கோபாலகிருஷ்ணன், வேறு சில நண்பர்கள், உள்ளூர் சிற்றுண்டி விடுதி அய்யர் ஒருவர் ஆகியோர் இவர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்கினர்.