பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 நினைவுக் குமிழிகள்-4 பல்கலைக் கழகத்தின் விரிவுச் சொற்பொழிவுகள் திட்டத்தினால் விளையும் பயன்கள் மிகப் பல. புலத்துறைப் பேராசிரியர்கள் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு தம் ஆராய்ச்சியால் பெற்ற அறிவை அவர்கட்கு வழங்கு கின்றனர்; இதனால் பல்கலைக் கழகம் தன்னைச் சுற்றி லும்-பல்கலைக் கழகத்திற்கு வெளியே-உள்ள அறிஞர் களுடன் தொடர்பு கொள்ள இவை வழியமைத்துத் தருகின்றன. இதனால் பல்கலைக் கழகத்தின் ஒரு சமூகப் பொறுப்பு நிறைவேறுகின்றது. தாயகத்தை விட்டு பிழைப் பின் நிமித்தம் மொழிபெயர் தேயத்தில்-தெலுங்கு பெரு வழக்காக நிலவும் பகுதியில்-பணியாற்றும் தமிழர்கட்குத் தாய்மொழி இலக்கியங்களைப்பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. அங்ங்னமே, தாய்மொழியாகிய தமிழ் மொழியைப் பேச்சளவில் கையாண்டு மொழியைப் பயிலவோ இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ வாய்ப்பின்றித் தவிக்கின்றார்கள். தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாவிட்டாலும் தம் மூதாதையர் திரட்டி வைத்ததை இலக்கியச் செல்வத்தைக் கேள்வி வாயிலாகக் கிடைக்கும்போது பேரார்வத்துடன் கேட்டு மகிழ் கின்றனர். இதனை நான் நேரில் கண்டு அநுபவித்தேன். முதற்பொழிவு : க. வி ங் க த் து ப் ப ர ணி-அறிமுகம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இச்சிறு காவியம் போர் பற்றி எழுந்தது என்றும், பணிக்கோர் சயங், கொண்டான் என்று போற்றப்பெறும் சயங்கொண்டான் என்ற கவிஞர் கோமானால் இயற்றப் பெற்ற ஓர் அற்புதக் காவியம் என்றும் விளக்கப் பெற்றது, பரணி சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்கள் தொண்ணுாற்றாறு வகைப்படும். பரணி நாளில் கொண்டாடப் பெறும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப் பாடப் பெற்றதால் 'பரணி என்பதன் இலக்கணம் தெரிவிக்கப் பெற்றது. தோற்றவர்களின் பெயர்களால் பரணி பனுவல்களின் பெயர்கள் அமைந்திருப்பது ஊன்றி நோக்கத் தக்கது.