பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் 449 பின்னர் நூல் தோன்றும் சூழ்நிலை, கலிங்கத்துப்பரணி தோன்றியதன் காரணம், நூலமைப்பு, தாழிசையாப் பால் அமைந்த காவியம் என்பன போன்ற கருத்துகள் உரைக்கப் பெற்றன. இரண்டாம் பொழிவு : 'கடை திறப்பு' என்ற தலைப்பில் நிகழ்த்தப் பெற்றது. இதுபற்றி உள்ள இருவேறு கருத்துகள் : ஒன்று : போருக்குச் சென்ற வீரர்கள் திரும்பி வரக் காலம் தாழ்க்க, அதனால் அவர்களின் மனைவிமார் கதவுகளை அடைத்துக் கொண்டு. உள்ளே இருக்க, கவிஞர் பெருமான் அவர்களின் இல்லத்தின்முன் நின்று கொண்டு அம்மகளிரின் இயற்கை யழகு, செயற்கை அழகு, மென்மைத் தன்மை முதலிய வற்றை எடுத்துக்கூறி அவர்களை அழைத்துக் கதவு திறக்கவும் போரின் வெற்றியைக் கேட்கவும் வேண்டும் என்பது. மற்றொன்று செருக்களம் சென்ற தம் கொழுநர் குறித்த காலத்து வாராது தாழக்கக் கவலையுற்றும் ஊடி யும் கதவுகளைத் தாளிட்டுக் கொண்ட மகளிரைத், தம் மன்னனும் அவனுடைய தானைத் தலைவனும் அடைந்த கலிங்க வெற்றியைப் பாடுவதற்குத் தலைநகரிலுள்ள பல்வேறு மகளிரும் நாட் காலையே எழுந்து வாயிற் கடை நின்று துயில் எழுப்புதல் என்பது. முதற்கருத்து அசம்பா விதத்தை எழுப்புவதால் அது தவிர்க்க கூடியது என்று பல காரணங்கள் கூறி விலக்கப் பெற்றது; இரண்டாவது கருத்து இயல்பானது என்றும், பொருத்தமானது என்றும் கூறி இக்கருத்து திருப்பாவை-திருவெம்பாவை முதலிய நூல்களில் பயின்று வந்துள்ள மரபுகளை அடியொற்றி வந்துள்ளதாக கொள்ளல் சிறப்புடையது என்றும் எடுத்துக் காட்டப் பெற்றது.இப்பகுதியில் சில சுவையான காட்சிகள் இலக்கிய நயம், கவிதை நயம் தோன்ற விரித்துக் காட்டப் பெற்றன. புறப்பொருளில் அகப்பொருள் கலந்து வந்த அற்புதமும் எடுத்துக் காட்டப் பெற்றது. நி-29