பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நினைவுக் குமிழிகள்-4 மூன்றாம் பொழிவு இது "பேய்கள் உலகம்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பெற்றது. இதில் இலக்கியத்தில் கற்பனை, காட்டின் இயல்பு, பாலைத் தினையின் பாங்கு, பேய்களின் தோற்றமும் இயல்பும், காளிதேவியின் திருக் கோயில், அன் ை யின் திருவோலக்கம், அன்னை வழிபாடு முதுபேயும் இந்திரசாலமும்,பேய்களின் முறையீடு, கலிங்கப் பேயின் வருகை, அக்கூளி கூறியவை, போர்க்களக் காட்சி கள், கூழடுதல், கூழுண்ணல், ஊமைப் பேய் குருட்டுப் பேய் மூடப் பேய் இவற்றின் செயல்கள், உண்டகளிப்பு என்ற சிறு தலைப்புகளில் "பேய்கள் உலகம் மிக்க சுவையுடன் அறிமுகம் செய்யப் பெற்றது. கான்காம் பொழிவு : 'வரலாற்றுக் குறிப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பொழிவில் வரலாற்றின் இன்றியமையாமை, வரலாற்று மூலங்கள், சோழர்காலச் செய்திகள், சோழ அரசர்களின் குடிவழி, கலிங்கத்துப் பரணியில் போற்றப் பெறும் அரசனின் சிறப்பு, கால் முடப் பேய்கள், கைமுடப் பேய்கள், .ெ ச வி ட் டு ப் பேய்கள், குருட்டுப் பேய்கள்-இவர்களை அறிமுகம் செய்வது போல் குலோத்துங்கனின் வெற்றிச் செயல்களை விளம்பும் கவிஞரின் கற்பனைத்திறன், அரசர் இயல்புகள், போர் முறைகள், சில வழக்காறுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இவை விரித்துரைக்கப் பெற்றன. இப் பொழிவில். சில சுவையான கவிதைகள் விளக்கப்பெற்றுக் கேட்போர் நெஞ்சம் நிறைய இலக்கியச் சுவை ஊட்டப் பெற்றது. ஐந்தாம் பொழிவு : பரணி காட்டும் சுவைகள்’ என்ற தலைப்பில் அமைந்தது இப்பொழிவு. முதலில் சுவை என்ற கருத்து தொல்காப்பிய அடிப்படையிலும் வட மொழிவாணர் நூல்களின் அடிப்படையிலும் விளக்கப் பெற்றது. அடுத்து நூலில் ஒன்பது சுவைகள் அமைந்திருக் கும் பாங்கு சில எடுத்துக்காட்டுகளால் விளக்கப்பெற்றது