பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் 45 I இப்பொழிவுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஆறாம் பொழிவு : மும்மணிகள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பொழிவு. இதில் குலோத்துங்கன், கருணாகரத் தொண்டைமான், கவிஞர் பெருமான் சயங் கொண்டான் என்ற மும்மணிகள் நல்ல முறையில் அறிமுகம் செய்யப்பெற்றனர். இந்த ஆறு சொற்பொழிவு பற்றிய விரிவான குறிப்பு களைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். 1971 ஜூலை மாதம் என்று நினைக்கின்றேன்: ஒவ்வொரு துறையிலுள்ள ஆசிரியர்களும் ஏதாவது ஆய்வுப்படி வைத்திருந்தால் அதை வெளியிடுவதற்கு நிதி வழங்கப்பெறும் என்றும், அது பற்றிய விவரம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்புமாறும் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 'பரணிப் பொழிவுகள் என்ற கைப்படி ஒன்று இருப்பதாகவும், அது'விரிவுப் பொழிவுகள் என்ற திட்டத்தின் கீழ் நிகழ்த்தப் பெற்ற ஆறு பொழிவு கள் பற்றியது என்று தெரிவித்தேன். அந்த ஆண்டு எந்தத் துறையினின்றும் எவரும் கைப்படி உள்ளது என்று எழுதிய தாகத் தெரியவில்லை. பிப்பிரவரி மாதம் ரூ. 2500/- தமிழ்த் துறைக்கு ஒதுக்கப் பெற்றுள்ளது என்றும், இதைக் கொண்டு நூல் மார்ச்சு 31ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் கடிதம் வந்தது. பல்கலைக் கழகம் அச்சகத்தில் தந்தாலும் இவ்வளவு குறுகிய காலத்தில் அச்சிட முடியாது. இந்த மாதிரி விஷயங்களில் இப்படி முடிவு எடுத்தால் அச்சிடுவது சாத்தியப்படத் தக்கது அன்று என்பதை தீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை யிலும் அதிகாரிகள் சிறிதேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காலம்’ என்ற கருத்தே அவர்கள் சிந்தையில்உதிப்பதில்லை. என்ன செய்வது? கடமை உணர்ச்சி இல்லாதவர்களைக் கடவுள்தரன் காப்பாற்ற வேண்டும்.