பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ52 நினைவுக் குமிழிகள் உலகியல் இப்படித்தானே உள்ளது? இதில்தானே நாம் காலம் தள்ள வேண்டியுள்ளது? காற்றுள்ளபோதே, துாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? பணம் கிடைக்கும். போதுதானே நூலைவெளியிட முடியும்? சுற்றறிக்கை வந்தவுடன் 1965-66 இல் விரிவாக வைத்திருந்த குறிப்பு களைக் கொண்டு ஆறு பொழிவுகளை எழுதிவிட்டேன். நவம்பருக்குள் எழுத்து வேலை முடிந்தது. கைப்படி அச்சுக்குத் தயாராக இருந்தது.தொகைக்கு வழிபிறந்ததும் S R.S. பதிப்பகத்தார் கம்பெனி மேலாளராக இருந்த கந்தனடிமைசண்முகம்பிள்ளைக்கு எழுதினேன். 'முடித்துத் தரலாம்" என்ற பதில் வந்தது. உடனே பல்கலைக் கழகத்திற்கு எழுதி, ரூ. 2500|க்குக் காசோலை வாங்கினேன். தொகையையும் கைப்படியையும் அனுப்பி வைத்தேன்.விரைவாக வேலை தொடர்ந்துநடைபெற்றது. Lpfrffäf4; 3 l இல் அச்சுவேலை முடிந்தது என்றும். கட்டமைப்பில் உள்ளது என்றும் பல்கலைக் கழகத்திற்கு, எழுதிவிட்டேன். மே இறுதியில் நூல்களின் படிகளைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட்டார்கள். இந்த நூலைத் தமிழகத்தை விட்டுப் பிழைப்பின் நிமித்தம் உலகெங்கும் பரவித் தமிழ் பேசிக்கொண்டு, தமிழ்மொழியின் மீது ஆராக்காதல் கொண்டும் உள்ள தமிழ். கூறு நல்லுலகத்தினருக்கு. வண்ணமார் கடலை மலைகளைக் கடந்து வயங்குடன் னாடுதோ றுற்று திண்ணிய அறிவாற் கரத்தினாற் பணிகள் சீருறப் புரிந்து நல் லுளத்தில் பண்ணிசைத் தெய்வத் தமிழினை மறவாப் பாங்குறு சகோதரர் தங்கள் கண்ணியஞ் சான்ற நண்பினுக் குவந்து கனிந்தகா ணிக்கையிந் நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இஃது என்னுடைய இருபத்து நான்காவது (மார்ச்சு 1972