பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப் பயணம் 萤岛、 வெளியீடாகும். இப்படி ஒரு தமிழ்த் தொண்டு புரிய இறைவன் என்னைக் கருவியாக்கிக் கொண்டான். குமிழி-213 57. நடு நாட்டுத் திருத்தலப் பயணம் டுேநாட்டுத் திருப்பதிகள் 2. திருவயிந்திரபுரம் திருக்கோவலூர் என்ற இரண்டும் நடுநாட்டில் சேர்ந்தவை, நான் திருப்பதியில் பணியாற்றிய முதல் ஆறாண்டுக் காலம் என் குடும்பம் காரைக்குடியில் இருந்தது. ஆகவே, செப்டம்பர் விடுமுறை (உ வாரம்), டிசம்பர்- சனவரி விடுமுறை (3 வாரம்), கோடை விடுமுறை (2 மாதம்) ஆகிய விடுமுறைகளில் காரைக்குடிக்கு வருதல்-திருப்பதி திரும்புதல் வழக்கமாக நடைபெற்று வந்தன. இந்தப் பயணங்களின் ஒரு பயணத்தில் (1965 டிசம்பர்-சனவரி) திருப்பாதிரிப்புலியூர் இருப்பூர்தி நிலையத்தில் இறங்கி பீமவிலாஸ் என்ற தங்கும் விடுதியில் அறையொன்று ஒரு நாள் வாடகைக்கு எடுத்தேன். அதில் காலைக் கடன்கள் நீராட்டம் இவற்றை முடித்துக் கொண்டு பேருந்து நிலையம் வந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து மேற்குத் திசையில் திருவயிந்திரபுரம் மூன்று கல் தொலைவு. பேருந்தில் சென்றேன். சாலையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள இயற்கைச் சூழல்கள் என் கண்ணையும் கருத்தையும் கவர் கின்றன. சாலையின் இருபுறமும் பச்சைப் பட்டு விரித்தாலெனப் பரந்து கிடக்கும் நெல்வயல்கள். இங்கும் அங்குமாகத் திகழும் சிறுசிறு தோப்புகள், பூங்கொத்துகள் குலாவும் குளிர்சோலைகள், வலைப்பின்னல் போல்