பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 - நினைவுக் குமிழிகள்-4 குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து செல்லும் கால்வாய்கள், இவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செல்லுகின்றேன், திருப்பாதிரிப்புலியூரிலிருந்து திரு.அயிந்திரபுரம் வரை இதே சூழ்நிலைதான். சித்தும் அசித்தும் எம்பெருமா னுடைய திருமேனியாக அமைந்துள்ள தத்துவ உண்மை என் சிந்தையில்-சிந்தனையில்-எழுகின்றது. திரு அயிந்திரபுரத்தை அடைந்ததும் இந்த ஊரின் பெயர் பற்றிய சிந்தனை என் மனத்தை ஆட்கொள்ளு கின்றது. சாரத்தை அறிந்தவர்களாகிய (சாரக்ராஹிகள்) பாகதவதர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு பகவத்பாகவத குணாதுபவக்களிப்பாலே எம்பெருமானைப் பற்றிய இசைப்பாடல்களைப் - ஆ ழ் வ |ா ரீ க ளி ன் ப ண் ண ா ர் ந் த பாசுரங்களைப் - பாடிக்கொண்டு: எம்பெருமானின் திருவடிப் பேற்றினையே நினைந்து கொண்டு வாழும் இடம் திருவயிந்திரபுரம் ஆகும். அகீந்த்ர புரம்' என்ற வடசொல் அயிந்திர புரம்' என்று. விகாரப் பட்டது. அஹlந்தரன்'- திருவனந்தாழ்வான்; அவன் வழிபட்டதலமாதலால் அயிந்திரபுரம் என்ற திருநாமம் ஏற்பட்டு திரு” என்ற அடைமொழியுடன் சேர்ந்து திரு அயிர்திரபுரம்' என்பதாக வழக்காறு: பெற்றது என்று அறிய முடிகின்றது. பல கோணங்களில் எம்பெருமான் உறையும் இடத்தைக் காட்டுவார் மங்கை மன்னன். ஒரு கோணத் தில் பார்க்கப்பெறும் சூழ்நிலை இது, 'பின்னும் மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து 'தென்ன-என்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந்தி புரமே." 1. பெரி. திரு. 3.1:2