பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப்பயணம் 455 (மாதவி-குருக்கத்தி: பெடை-பெண் அன்னம்: பிணி-கட்டு; கமலம்-தாமரை, முரல் தருபாடாநிற்கின்ற) வண்டுகள் தம்முடைய பெண்வண்டுகளுடன்கூடித் தாமரை மலரின் மீது இருந்து கொண்டு மது பானம்' பண்ணு கின்றன. தம்பதிகட்குள் ஊடல் (பிரனய கலகம்) ஏற்படு கின்றது. பெண்வண்டு ஆண்வண்டை விட்டு நீங்கிக் குருக்கத்திப் பந்தரில் புகுந்து ஒளிந்து கொள்ளுகின்றது. அதனைப் பிரிந்து ஆற்ற மாட்டாத ஆண்வண்டு தனது துணைவண்டு ஊடல் தீர்ந்து ஓடிவருமாறு தாங்கொணாத தனது சிரம நிலையை வெளியிடுகின்ற இன்னிசைப் பாடல் களைத் தாமரை மலரில் இருந்து கொண்டு பாடுகின்றது. இப்படிப்பட்ட பொழில் வாய்ப்புப் பொருந்தியது இந்தத் திவ்வியதேசம். வண்டானது, கிளைகளின் (சாகை களின்) நுனியிலே திரியுமாப் போலே வேதசாகையின் நுனியில் (உபநிடதங்களில்) விளங்குகின்ற எம்பெருமான், எம்பெரு மாட்டியுடன் ஊடல் கொண்டு செய்யும் செயல் களைச் சொல்லுவதாகக் கொள்வர் வியாக்கியாதாக்கள் 'பிராட்டியும் தானுமான சேர்த்தியில் ப்ரணய கலகம் மாறாதே செல்லுமாப் போலேயாயிற்று அங்குத்தைத் திர்யக்குகளுடைய யாத்ரையும்’’’ என்ற இன்சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளையின் அருளிச் செயலில் ஆழங் கால் படுகின்றேன். திருக்கோயிலின் கருவறைக்குச் சென்று கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத் தில் சேவை சாதிக்கும் அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகனையும், வைகுண்டவல்லித் தாயாரையும் 2. அங்குத்தை-அவ்விடம்; திர்யக்குகள்-விலங்குகள், பல கோணங்களில் காட்டப் பெறும் சூழ்நிலை களை தொண்டை நாட்டுத் திருப்பதிகள்-பக்.241 .248 காண்க.